PUBLISHED ON : டிச 05, 2016

பனங்காடை 'இன்டியன் ரோலர்' (Indian Roller)
காகத்தைப் போல் ஒலி எழுப்பும் பறவை பனங்காடை. 'கோராசிடே' (Coraciidae) குடும்பத்தைச் சேர்ந்தது. பூச்சியுண்ணி வகைப் பறவை. நீலமும், பழுப்பும் கலந்த நிறத்தில் தோற்றமளிக்கும். கொண்டை, வால், இறக்கை ஆகிய பகுதிகள், நீல நிறத்திலும், கழுத்து, உடலின் அடிப்பகுதி பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் கண்களைச் சுற்றியுள்ள பகுதி, காவி நிறத்தில் (Ochre - ஆச்சர்) தோன்றும்.
நகர்ப்புறங்களில், மின் கம்பிகளின் மீதும் இவற்றைக் காணலாம். இவை, பாலக்குருவி என்றும் குறிப்பிடப் படுகின்றன. ஆசிய கண்டத்தின் தெற்குப் பகுதியில், பரவலாகக் காணப்படுகின்றன. ஈராக், தாய்லாந்து பகுதிகளிலும், இந்தப் பறவைகள் வசிக்கின்றன. இந்தியாவில், கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, பீகார் மாநிலங்களின், மாநிலப் பறவையாக பனங்காடை உள்ளது.
உணவு: சிறு பூச்சிகள், தவளை, பாம்பு, ஊர்வன போன்றவை.
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு, 50 பறவைகள் என்ற வீதத்தில், பரலாகக் காணப்படும்.
உயிரியல் பெயர்: கோராசியஸ் பெங்காடலென்சிஸ் (Coracias Benghalensis)
நீளம்: 27 செ.மீ.
பல்லுயிர் பெருக்கத்தில் கட்டுப்பாடு
* ஆண், பெண் பறவைகள், ஒரே மாதிரி தோற்றமளிக்கும்.
* மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும்.
* விளை நிலங்கள், அடர்த்தி குறைந்த காடுகள், திறந்த புல்வெளிகளில் வசிக்கும்.
* மரப் பொந்துகளில் வசிக்கின்றன.
* மார்ச் முதல் ஜூன் வரை இனப்பெருக்கம் செய்யும்.
* வலசை போவது கிடையாது.
- கிருஷ்ணன்
