PUBLISHED ON : ஜூன் 20, 2016

மலைகளின் அரசி ஊட்டி - தெரியும்!
பழங்களின் ராணி?
அந்தப் பழத்தை நீங்கள் அப்படியே கழுவிச் சாப்பிடலாம். அல்லது சாறாக செய்து குடிக்கலாம். உலர்ந்த பழமாகவும் சாப்பிடலாம். பாயாசம், ஐஸ்கிரீம் போன்றவற்றிலும் கலந்து உண்ணலாம்.
அந்த பழம், 'பழங்களின் ராணி' என்று பெயர் பெற்றிருக்கும் திராட்சை!
இது கொடியில் காய்க்கும் கனிவகை.
கொத்துக் கொத்தாய்க் காய்க்கும். மெல்லிய தோலும் உள்ளே சதைப் பற்றும் கொண்டது. சிலவற்றில் விதைகள் இருக்கும். சிலவற்றில் இருக்காது. திராட்சையில் பச்சை, கறுப்பு, ஊதா எனப் பல வண்ண வகைகள் உண்டு. திராட்சையை 6000 வருடங்களுக்கு முன்பே மக்கள் அறிந்திருக்கிறார்கள். பண்டைய ரோமானிய, கிரேக்க, எகிப்து நாடுகளின் சடங்குகளில் எல்லாம் முக்கியமான பானமாக திராட்சைச் சாறு பயன்பட்டிருக்கிறது.
திராட்சையில், தாமிரம், இரும்பு, மாங்கனீசு போன்ற கனிமங்கள் அடங்கியுள்ளன.
வைட்டமின் சி, கே, ஏ ஆகியவை உள்ளன. கொழுப்பு குறைவு. நீர்ச்சத்து அதிகம்.
