sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

வாசிப்பு வளம் தரும்

/

வாசிப்பு வளம் தரும்

வாசிப்பு வளம் தரும்

வாசிப்பு வளம் தரும்


PUBLISHED ON : பிப் 12, 2018

Google News

PUBLISHED ON : பிப் 12, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புத்தகம் படிக்கும் பழக்கம் அறிவை விசாலமாக்கிக் கொள்ளவும், மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும் உதவுகிறது. 'மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு எந்த அளவு அவசியம்?' என்ற தலைப்பில் சென்னை, வளசரவாக்கம், தேவி அகாடமி பள்ளி மாணவர்கள், சிறார் எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதியுடன் உரையாடினார்கள்.

சரவணன் பார்த்தசாரதி: பொழுதுபோக்குக்காக, தகவல் தேவைக்காக, அறிவுத் தேடலுக்காக சிறிய வயதிலிருந்தே மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தணும். வாசிப்புங்கறது அலுப்பூட்ற விஷயமில்ல. நீங்க படிக்கப்படிக்க உங்கள் தேடல் அதிகரிக்கும். அது உங்களை சாதனையாளரா மாற்றும். நீங்க என்னென்ன புத்தகங்கள் படிச்சிருக்கீங்க, உங்க வாசிப்பு ஆர்வம் எப்படின்னு சொல்லுங்க.

அ.நாச்சியப்பன்: எனக்கு அறிவியல் கற்பனைக் கதைகள் பிடிக்கும். அறிவியல் கதைகள் கற்பனைத் திறனைத் தூண்டுது. நாமளும் புதுசா ஏதாவது கண்டுபிடிக்கணும்னு ஆர்வத்தைத் தருது.

ஏ.குருபிரசாத்: ராமாயணம், மகாபாரதக் கதைகளை வீட்டுல சொல்லியிருக்காங்க. கதையா கேட்ட அதே விஷயங்களை புத்தகமா படிக்க ஆரம்பிச்ச பிறகு, நிறையத் தெரிஞ்சுக்கிட்டேன். நீதிக்கதைகள் படிக்கப் பிடிக்கும்.



ஸ்ரீ.ர.ஹரிணி:
வரலாற்றுக் கதைகளை ஆர்வமா படிப்பேன். பழைய காலத்தில மனிதர்களின் வாழ்க்கை, பழக்கவழக்கம் எப்படியெல்லாம் இருந்ததுன்னு நிறைய தெரிஞ்சுக்கலாம்.

பா.திவ்யதர்ஷினி: அறிவியல் தொடர்பான தகவல்களைத் தர்ற புத்தகங்கள்தான் என்னோட முதல் தேர்வா இருக்கும். நிறையப் புத்தகங்கள் வாங்குவேன். விடுமுறை நாட்களில் புத்தகங்களைப் படிப்பேன்.

வெ.ஆண்டாள்: கதைப் புத்தகம் வாசிக்க ரொம்பப் பிடிக்கும். சிறுவர் புத்தகங்கள், இதழ்கள் எல்லாமே வாங்கிப் படிப்பேன்.

பிரஹலாத் சதீஷ்: எனக்கு தாய்மொழி தமிழ் இல்ல. ஆனா, தமிழைப் பாடமா படிச்சிட்டிருக்கேன். 'தெனாலிராமன் கதைகள்' எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய முறை படிச்சிருக்கேன்.

சரவணன் பார்த்தசாரதி: நீங்க எல்லாருமே புத்தகங்கள் படிக்கறீங்கன்னு கேட்கச் சந்தோஷமா இருக்கு. புத்தகம் நமக்குப் பல தகவல்களைத் தருது. அந்தத் தகவல்களை அறிவுக்கான கையேடா நாம பயன்படுத்திக்கறோம். நீதிக்கதைகள் போன்ற புத்தகங்களைப் படிக்கறப்ப, நமக்குக் கிடைக்கற அறிவை நாம நடைமுறைப்படுத்திக்கற பழக்கம் தன்னாலே உருவாகிடுது. புத்தக வாசிப்பு ஒவ்வொரு மனிதரையும் மேம்படுத்தும். குறிப்பா, மாணவர்கள் வாழ்க்கையை வளமாக்கும்.






      Dinamalar
      Follow us