PUBLISHED ON : செப் 26, 2016

முன்பு மளிகைக் கடையில் இருந்து வீட்டிற்கு பொருட்கள் வந்தால் சாக்குப் பையில்தான் மூட்டையாகக் கட்டி கொடுத்தனுப்புவார்கள். இப்போது துணி அல்லது நெகிழிப் பைகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. சாக்குப் பை பக்க விளைவுகள் இல்லாதவை. எளிதில் மக்கும் தன்மை கொண்டவை. மண்ணிற்கும் உரமாகும். சாக்குப் பையை கோணிப்பை என்றும் அழைக்கிறார்கள்.
சணல் செடியில் இருந்துதான் சாக்குப் பைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தச் சணல் எனப்படும் ஜூட் பைகளை ஒரு காலத்தில் ஏழைகள் இடுப்பில் ஆடைகளாக பயன்படுத்தி இருக்கிறார்கள். மழைக்கு போர்வையாகவும் தலையில் அணிந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது நவீன தொழில்நுடபம் வந்து விட்டது பாலீஷ் செய்யப்பட்ட சணல் நாரிலிருந்து அழகான ஆடைகள் தயாரிக்கிறார்கள். சிறிய பைகள், ஃபைல்கள், லேட் டாப் உறைகள், ஃப்ரிட்ஜ் கவர் உள்ளிட்டவையும் சணல் நாரிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
சணல் நூலை தங்கக் கயிறு என்று அழைக்கிறார்கள். சணல் தயாரிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வங்கதேசம், சீன நாடுகள் அடுத்தடுத்த இடஙகளை வகிக்கின்றன.
சாக்குப் பையைக் கொண்டு முன்பு பள்ளிக் கூடங்களில ஓட்டப் பந்தயம் நடக்கும். திறந்த சாக்குப் பையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு கோட்டின் மீது நிற்க, ஆசிரியர் விசில் ஊதியதும் சாக்குப்பையுடன் குதித்து குதித்து ஒடி.. பரிசுக்குப் போட்டியிடுவார்கள்.
