
கூகாபாரா பறவை (Kookaburra) மனிதர்கள் சிரிப்பது போல் ஒலி எழுப்பும்.
உண்மை. மேற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் இப்பறவை 43 செ.மீ. உயரம் வளரும். இவற்றின் அலகு 8-10செ.மீ. வரை நீளமாக இருக்கும். பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும் இப்பறவைகள் காடுகளில் வாழும். இவை புழு, பூச்சிகளோடு, கொடிய விஷமுள்ள பாம்புகளையும் உண்ணும். அதிகாலையிலும்,
மாலையில் சூரிய மறைவுக்குப் பின்னரும் இவை ஒலி எழுப்பும். இவ்வொலி மனிதர்கள் சிரிப்பது போல் இருக்கும் என்பதால் தான் இவை சிரிக்கும் கூகாபாரா (Laughing kookaburra) என்று அழைக்கப்படுகின்றன.
மேயோன் எரிமலை (Mayon Volcano) ஜப்பானில் உள்ளது.
பொய். உலகின் மிகவும் நேர்த்தியான எரிமலை கூம்பு (Volcanic cone) என்று அறியப்படும் மேயோன் எரிமலை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,462 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த எரிமலையின் சுற்றளவு 130 கி.மீ. மலையேற்றத்தில் ஆர்வமுள்ளவர்களின் விருப்பத்திற்குரிய இடமாக இம்மலை உள்ளது. 1616 ஆம் ஆண்டு முதல் இதுவரை மூன்று முறை வெடித்துள்ளது.

