
காஸ்பியன் ஸீ (Caspian sea) என்பது ஒரு கடல்.
தவறு. காஸ்பியன் ஸீ (கடல்) என்று அழைக்கப்பட்டாலும், இது கடல் அல்ல. உலகின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரியாகும். 3,86,400 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், 78,200 கன அடி தண்ணீர் உள்ளது. கப்பல் போக்குவரத்து, மீன் பிடிப்பு, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுத்தல் ஆகியவை இந்த ஏரியில் நடைபெறும் முக்கியமான பொருளாதாரச் செயற்பாடுகள். வோல்கா, யூரல், டெரெக் ஆகிய முக்கிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன.
சிலியின் ப்ளமிங்கோ (Chilean Flamingo) 50 ஆண்டுகள் வாழும்.
உண்மை. தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட இப்பறவைகள், பொதுவாக 40-50 ஆண்டுகள் வாழ்பவை. இப்பறவை னம் நீண்ட ஆயுட்காலம் கொண்ட பறவை இனங்களுள் ஒன்றாகும். இவற்றால் மணிக்கு 59 கி.மீ. வேகத்தில் ஓட முடியும். இவை ஒரு நேரத்தில் ஒரு முட்டை இடும். ஆண், பெண் பறவைகள் இரண்டும் மாறி மாறி 3-4 வாரங்கள் அடைகாக்கும்.

