sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : ஏப் 10, 2023

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள் தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான எதை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக, சீனா அத்துமீறி உரிமை கொண்டாடி வருகிறது?

அ. அசாம்

ஆ. அருணாச்சலப் பிரதேசம்

இ. மணிப்பூர்

ஈ. மேகாலயா

2. மறு பயன்பாட்டு ஏவு வாகனம், தானாகவே தரையிறங்கும் பரிசோதனையை, எந்த நாட்டின் விண்வெளி ஆய்வு மையம், சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தியது?

அ. அமெரிக்கா

ஆ. சீனா

இ. இந்தியா

ஈ. ரஷ்யா

3. அமெரிக்காவில் உள்ள எந்தப் பல்கலையில், தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் தொடர்பான ஆய்வுகள் செய்வதற்கான இருக்கை அமைக்க, இந்திய கலாசார உறவுக்கான கௌன்சிலுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது?

அ.ஹார்வர்டு

ஆ. பிரின்ஸ்டன்

இ. ஸ்டான்ஃபோர்டு

ஈ. ஹூஸ்டன்

4. அமெரிக்காவின், 'மார்னிங் கன்சல்ட்' என்ற வர்த்தகப் புலனாய்வு நிறுவனம் நடத்திய, உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் குறித்த ஆய்வில், இந்தியப் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ள நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் யார் ?

அ. அல்பான்ஸ் (ஆஸ்திரேலிய பிரதமர்)

ஆ. ஆண்ட்ரூஸ் மேனுவல் (மெக்சிகோ அதிபர்)

இ. ஜோ பைடன் (அமெரிக்க அதிபர்)

ஈ.ரிஷி சுனக் ( பிரிட்டன் பிரதமர்)

5. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, வரும் கல்வி ஆண்டு முதல் எத்தனை சதவீத வருகைப்பதிவு கட்டாயம் இருக்க வேண்டும் என, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்?

அ.100

ஆ.50

இ.80

ஈ.75

6. 'நோட்டோ' எனப்படும், ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் இராணுவ அமைப்பில், 31ஆவது உறுப்பினராக, எந்த நாடு சமீபத்தில் இணைந்துள்ளது?

அ. ரஷ்யா

ஆ. உக்ரைன்

இ. பின்லாந்து

ஈ. இந்தியா

7. இந்திய நீதித்துறை அறிக்கையின்படி, நீதிமன்றங்களை மக்கள் அணுகுவதற்கான வாய்ப்பைச் சிறப்பாக அளிக்கும் மாநிலங்களில், எது முதலிடத்தில் உள்ளது?

அ. கர்நாடகம்

ஆ. தமிழ்நாடு

இ. கேரளம்

ஈ. ஆந்திரப் பிரதேசம்

8. பிரீமியர் கிரிக்கெட் தொடர்களில், 50ஆவது முறையாக, 50க்கும் மேல் ரன்களை விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளவர்?

அ. தோனி

ஆ. விராட் கோலி

இ.ரோஹித் சர்மா

ஈ. அஸ்வின்

விடை

1.ஆ. 2 இ. 3 ஈ. 4. ஆ. 5. ஈ. 6.இ. 7.அ. 8.ஆ.







      Dinamalar
      Follow us