தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ரீலா? ரியலா?

ரீலா? ரியலா?

ரீலா? ரியலா?


PUBLISHED ON : ஆக 07, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெல்லி மீன்களுக்கு மூளை உண்டு.

தவறு. ஜெல்லி மீன்கள் எளிமையான உடலைக் கொண்டுள்ளன. மூளை, எலும்புகள், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் இல்லை. மூளை இல்லாமல் இவற்றால் வாழமுடியும். மூளை, மத்திய நரம்பு மண்டலம் இல்லை என்றாலும், அவற்றின் தண்டுகளின் அடிப்பகுதியில் மிகவும் அடிப்படையான நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் மூலம், தொடுதல், வெப்பநிலை, உப்புத்தன்மை போன்றவற்றை அவை கண்டறிகின்றன. அதற்கேற்ப, ஜெல்லி மீன்கள் எதிர்வினையாற்றுகின்றன. ரத்த ஓட்டமும் காணப்படுவதில்லை. எனவே, நீரிலிருந்து ஆக்சிஜனை அவை உறிஞ்சிக் கொள்கின்றன.

லைகேஸ் நொதி (Ligase) டி.என்.ஏ. மூலக்கூறுகளை ஒட்டப் பயன்படுகிறது.

உண்மை. உயிரி தொழில்நுட்பம், மரபு பொறியியல் உள்ளிட்ட துறைகளின் சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும், இந்நொதி பயன்படுகிறது. உதாரணமாக, ஜீன் குளோனிங் முறையில், ஒரு ஜீன் அல்லது டி.என்.ஏ. துண்டு, பாக்டீரிய செல்லினுள் செலுத்தப்படுகிறது. பாக்டீரிய செல் பல்கிப் பெருகும்போது அதனுடன், உட்செலுத்தப்பட்ட டி.என்.ஏ. துண்டு நகல் பெருக்கம் அடைகிறது. இச்செயல் முறையில் டி.என்.ஏ.வை துண்டாக்க ரெஸ்ட்டிக்ஷன் எண்டோ நியூக்ளியஸ் நொதியும் (Restriction endonucleases), துண்டாக்கப்பட்ட டி.என்.ஏ. துண்டுகளை ஒட்ட லைகேஸ் நொதியும் பயன்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us