தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/மணக்கும் சோறு

மணக்கும் சோறு

மணக்கும் சோறு


PUBLISHED ON : அக் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மல்லிகை அரிசி (Jasmine Rice - ஜாஸ்மின் ரைஸ்)

* மிக வெண்மையாகவும், நறுமணம் உடையதாகவும் இருக்கும் ஓர் அரிசி வகை. சமைத்த பின்னர் மிக வாசனையாக, மிருதுவாக, லேசான இனிப்புச்சுவையுடனும் அதிக ஒட்டும் தன்மையுடனும் இருக்கும்.

* சாதாரண 'ஒரைஸா சடைவா' (Oryza sativa) நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியைவிட நீளம் அதிகமானது.

* இந்த அரிசியின் நறுமணம் சேமித்து வைக்கும் சில மாதங்களில் இல்லாமல் போய்விடும். இதனால் ஒவ்வொரு முறையும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசியையே நுகர்வோர் விரும்புகிறார்கள்.

* சமைக்கும்பொழுது 'அசிட்டைல் பைரோலின்' (Acetyl pyrroline) எனும் வேதிப்பொருள் ஆவியாவதே, நறுமணத்துக்குக் காரணம்.

* மல்லிகை அரிசியின் சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic Index) 60-80 ஆக உள்ளது. பாஸ்மதி அரிசியே மிகக்குறைவான GI (59) கொண்டது.

* தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது.

தெரி்ந்து கொள்வோம்!

1. இந்தியாவில் நெல் அதிகம் விளையும் மாநிலம் எது?

.......................................

2. வண்டு இனங்களில் மிகச் சிறியது எது?

.......................................

3. நாரை இனத்தில் உயரமானது எது?

.......................................

4. மணமுள்ள ஓர் அரிசி வகை எது?

.......................................

விடைகள்

1. மேற்கு வங்கம்

2. ஸ்கைடோசெல்லா முசாவாசென்சிஸ் (Scydosella musawasensis) அளவு: 0.325 மி.மீ.

3. 'சேடில் -பில்டு ஸ்டார்க்' (Saddle- billed Stork), உயரம்: 5 அடி

4. பாஸ்மதி

- அ.லோகமாதேவி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us