தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அகல வாயன்

அகல வாயன்

அகல வாயன்


PUBLISHED ON : அக் 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நத்தை குத்தி நாரை

ஆங்கிலப் பெயர்: 'ஏசியன் ஓபன்பில் ஸ்டார்க்' (Asian Openbill Stork)

உயிரியல் பெயர்:'அனாஸ்டமஸ் ஓசிட்டான்ஸ்' (Anastomus oscitans)

நாரைக் குடும்பத்தில் மிக உயரமான பறவைகளில் ஒன்று. நீரில் தத்தி நடக்கும் (Wadding Birds - வேடிங் பேர்ட்ஸ்) பறவை வகையைச் சேர்ந்தது. இந்தியா, வங்கதேசம், கம்போடியா, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. குளிர் காலங்களில் குளம், குட்டை, ஆற்றங்கரைகளிலும்; கோடைக் காலங்களில் விவசாய நிலங்களிலும் வாழும்.

சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். இனப்பெருக்க காலங்களில், உடல் வெள்ளை நிறத்திலும், இறக்கைகள் மின்னும் கருப்பு நிறத்திலும் இருக்கும். நீரில் பாதி மூழ்கியிருக்கும் மரங்களிலும், விவசாய நிலங்களிலுள்ள மரங்களிலும் கூடு கட்டி வசிக்கும். நத்தை, தவளை, பூச்சி, தானியங்கள், மெல்லுடலிகள், நீர்ப் பாம்புகள் ஆகியவை இவற்றின் பிரதான உணவுகள்.

இனப்பெருக்க காலம்: வட இந்தியா, ஜூலை - செப்டம்பர், தென்னிந்தியா, நவம்பர் - மார்ச்

இடும் முட்டைகள்: 2 முதல் 4 வரை

அடைகாத்தல்: ஆண் பெண் இரண்டும்

அடைகாக்கும் நாட்கள்: 25

தனிச் சிறப்பு: மேல் அலகுக்கும் கீழ் அலகுக்கும் நடுவில் இடைவெளியைக் கொண்டுள்ளது. வாய் அகலமாகக் காணப்படும்.

எடை: 2 கிலோ முதல் 9 கிலோ வரை

வாழ்நாள்: 18 ஆண்டுகள்

உயரம்: 68 செ.மீ.

- கிருபாநந்தினி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us