தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கடலில் அதிகரிக்கும் வெப்பநிலை

கடலில் அதிகரிக்கும் வெப்பநிலை

கடலில் அதிகரிக்கும் வெப்பநிலை


PUBLISHED ON : அக் 14, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகின் வெப்பத்தில் 93 சதவீதத்தை கடல் தனக்குள் உறிஞ்சிக்கொள்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் வெப்பத்தை ஓரளவு குறைப்பதற்கு இதுவே காரணமாகிறது. கடலின் வெப்ப நிலை அதிகரிப்பதும் இயற்கைக்குக் கேடு விளைவிக்கும் செயல்தான்.நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனின் பெரும்பங்கை கடல்களே வழங்குகின்றன. கடல் புவியின் பெரும்பங்கு வெப்பத்தை உறிஞ்சுவதால் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்வு பாதிக்கப்படுகிறது. சிறிய நுண்ணுயிரி முதல் பெரும் திமிங்கிலங்கள் வரை, கடற்பரப்பிலும் கடல் உள்ளேயும் ஏற்படுகிற சூழலியல் சீர்கேடுகளால் பாதிக்கப்படுகின்றன. இதனால் கடல்வாழ்

உயிரினப் பரவல் குறைகிறது. அதிக அளவில் கடல்வாழ் உயிரினங்கள் புலம்பெயர்கின்றன. புவி வெப்பமயமாதலும், கடல் வெப்பத்தை உறிஞ்சிக்கொள்வதும் இயற்கை வளங்களான பவளப்பாறைகளையும் அழிக்கின்றன. கடல் நீர்மட்டம் மாறுபாட்டுக்கும், கடல் நீர்ப் பரப்பு குறைவதற்கும் காரணமாக ஆகின்றன. அண்டார்டிகா போன்ற கண்டங்களில் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகுவதும் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us