
புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (NASA - நாசா) தெரிவித்து உள்ளது. அதீத நீர் மட்ட உயர்வு காரணமாக அடுத்த நூற்றாண்டுக்குள் 6 மீட்டர் வரை தரைப்பகுதி மூழ்கும் அபாயம் உள்ளது.
பூமியின் தரைப்பகுதியில் உருவாகும் வெப்பம் கடல், பெருங்கடல்களின் தரையை அடையும்போது கடல் நீர் மட்டம் உயர்கிறது. இது வெள்ளி கிரகத்தின் மேற்புற வெப்ப நிலை அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த 22 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 7 செ.மீ. உயர்ந்து உள்ளது. ஆண்டுக்கு உயர்வு வீதம் 1.9 மி.மீ. ஆக உள்ளது. இதே நிலையில் நீடித்தால் அடுத்த நூற்றாண்டு நடுப்பகுதியில் சுமார் 6.4 மீட்டர் வரை கடல் நீர்மட்டம் உயரும்.
அதிகரிக்கும் தொழிற்சாலை புகை, வாகனப் புகை போன்ற காரணங்களால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. அன்டார்டிகா பகுதியின் பனி மலைகள் வெப்பம் சரிவடைவதும் கடல் நீர் மட்ட உயர்விற்கு காரணமாக உள்ளது. பனி மலைகளும் உருகுவது அதிகரித்தால் புவியின் நீர்மட்டம் சுமார் 60 மீட்டர் வரை உயரும். கடல் நீர் மட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றால் உலக வரைபடத்தில் இருந்து நிலப்பகுதிகள் மூழ்கி இல்லாமல் போகும். எனவே, புவி வெப்பமயமாதலைத் தடுக்க உரிய தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நாம் வாழும் சூழலைக் காப்பதில் நாம் அக்கறை கொள்ள வேண்டும்.
* புவி வெப்பமடைதல் (Global Warming - குளோபல் வார்மிங்): வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயு அதிகரிப்பதால் ஏற்படுவது.
* பருவநிலை மாற்றம் (Climate Change - கிளைமேட் சேஞ்): புவி வெப்பம் அடைவதால் பூமியின் தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம்.
- ப.கோபாலகிருஷ்ணன்

