PUBLISHED ON : மே 30, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'இஸ்ரோ' தயாரித்துள்ள, மறு பயன்பாட்டு வாகனமான ஆர்.எல்.வி. (Reusable Launch Vehicle) விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து மே 23, காலை, 9:30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஐந்து ஆண்டு காலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சியில், 95 கோடி ரூபாய் மதிப்பில் இந்த விண்கலம் இந்தியாவில் தயாரானது. இது போன்ற விண்கலத்தை இதுவரை அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்தது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், 'இந்த மறு பயன்பாட்டு வாகனம் செயல்பாட்டிற்கு வந்தால், ராக்கெட் ஏவும் செலவு, பத்தில் ஒரு பங்காகக் குறையும். இந்த வாகனம் செயல்பாட்டிற்கு வர 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும்' என்றார்கள்.

