PUBLISHED ON : டிச 05, 2016

நிலாவில் உலாவ குறைந்த செலவில் 'ரோபோ' அனுப்ப தொழில்நுட்ப நிறுவனம் முடிவு செய்துள்ளது.
விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் டீம்இண்டஸ் (TeamIndus). இது, குறைந்த செலவில் நிலாவுக்கு 'ரோபோ' ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (இஸ்ரோ -ISRO) ஒப்பந்தம் செய்துள்ளது.
குறைந்த செலவில் நிலாவுக்கு 'ரோபோ' அனுப்புவது தொடர்பாக கூகுள் ஒரு போட்டியை (Google Lunar XPRIZE) நடத்துகிறது. இந்த போட்டியில் டீம்இண்டஸ் நிறுவனம் பங்கேற்கிறது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் உதவியுடன், இந்த 'ரோபோ'அடுத்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 'ரோபோ'வை, 100 பேர் கொண்ட என்ஜினியர்கள் குழு உருவாக்கிவருகிறது. இந்த குழுவில், 20 பேர் ஓய்வுபெற்ற விஞ்ஞானிகள் உள்ளனர். இதற்கான பணி கர்நாடக மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், 200 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
