உள்ளடக்கத்திற்கு செல்ல

இந்தியாவில் விமான இஞ்சின் தயாரிக்க ரோல்ஸ் ராய்ஸ் முடிவு
இந்தியாவில் விமான இஞ்சின் தயாரிக்க ரோல்ஸ் ராய்ஸ் முடிவு
PUBLISHED ON : மே 01, 2017

அ நிறம் | அளவு
உலக அளவில் விமான இஞ்சின் தயாரிப்பில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் 50% பங்குகளைக் கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவிலேயே சிறு ரக விமானங்களுக்கான இஞ்சின்களைத் தயாரிக்க, பிரிட்டிஷ் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் கிஷோர் ஜெயராமன் கூறுகையில், '50 லிருந்து - 60 இருக்கைகள் கொண்ட சிறு ரக விமானங்களுக்குத் தேவையான இஞ்சின்களை இந்தியாவிலேயே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆனால், அதற்கு உகந்த உட்கட்டமைப்பு வசதிகளும், ஆர்டர்களும் கிடைக்கவேண்டும். டாடா, மகிந்திரா உள்ளிட்ட மற்ற இந்திய நிறுவனங்களும், சிறு ரக விமானத் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றன. எனவே, இந்நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம்' என்றார்.
