உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 01, 2017

அ நிறம் | அளவு
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவில்லை. அதற்கு முன்பே வெயில் தமிழக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிவிட்டது. இந்நிலையில், தமிழ் வானியல் கணக்கு அடிப்படையில், வரும் மே 4 முதல் தொடங்கும் 'அக்னி நட்சத்திரம்', மே 28 வரை நீடிக்கும். இந்தக் காலத்தில், வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொடும். இதனால், முடிந்தவரை பகல் நேரங்களில் வெளியில் சென்று விளையாடுவதை, மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும், பழரசம், இளநீர், நீர்மோர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, கிர்ணி போன்ற பழங்களை, அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம், வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
