தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கடந்தவாரம்! நான்கில் ஒன்று சொல்!

கடந்தவாரம்! நான்கில் ஒன்று சொல்!

கடந்தவாரம்! நான்கில் ஒன்று சொல்!


PUBLISHED ON : டிச 23, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 23, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி, சரியான விடையை முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.

1. உலக அளவில் அறிவியல் கட்டுரைகளை அதிகம் வெளியிடுவதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

அ) 2வது

ஆ) 3வது

இ) 4வது

ஈ) 8 வது

2. சந்திரயான் 3 திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) தாள நடராசன்

ஆ) பாபு பட்டேல்

இ) பொன் வெற்றிவேல்

ஈ) வீர முத்துவேல்

3. மாநில அரசுகள், தனியார் விற்பனை செய்யும் லாட்டரிக்கு எத்தனை சதவீத ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

அ) ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு

ஆ) 28 சதவீதம்

இ) 32 சதவீதம்

ஈ) 18 சதவீதம்

4. உலகிலேயே உயரமான மரம் என கண்டறியப்பட்டுள்ள அமேஸான் காடுகளின் ஜாரி ஆற்றங்கரையில் உள்ள டினிஸியா எக்ஸல்சா மரத்தின் உயரம் எவ்வளவு?

அ) 180 அடி

ஆ) 198 அடி

இ) 290 அடி

ஈ) 310 அடி

5. நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை ________ மாநிலத்தைச் சேர்ந்த __________பெற்றுள்ளார்?

அ) குஜராத், ஹாசன் சஃபின், வயது 22

ஆ) கேரளம், மனோஜ், வயது 21

இ) கர்நாடகம், வி.எஸ். தினகர், வயது 23

ஈ) கோவா, விஷால், வயது 23

6. ஐந்து மாத இடைவெளியில் இரு விமானங்கள் விபத்துக்கு உள்ளானதில் 346 பேர் உயிரிழந்தனர். இதனால் ____________ரக விமானத் தயாரிப்பை கைவிடுவதாக போயிங் அறிவித்துள்ளது?

அ) 737 மேக்ஸ்

ஆ) 777 போயிங்

இ) 756 மேக்ஸ்

ஈ) 784 மேக்ஸ்

7. நெஃப்ட் புதிய முறைப்படி, வங்கிப் பரிவர்த்தனை நேரம் என்ன?

அ) வங்கி வேலை நேரத்தில் மட்டுமே

ஆ) ஆண்டு முழுவதும், காலை 8 முதல் மாலை 6.30 மணி வரை

இ) வங்கி விடுமுறை தினங்கள் உட்பட ஆண்டின் அனைத்து நாட்களிலும், 24 மணிநேரமும்

ஈ) ஆண்டு முழுவதும், காலை 10 முதல் இரவு 10 மணி வரை

8. பிரிட்டனின் தற்போதைய பிரதமர் யார்?

அ) போரிஸ் ஜான்சன்

ஆ) டோனி பிளேர்

இ) தெரசா மே

ஈ) ஜெராமி ஹண்டு

9. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை 'ஹாட்ரிக்' விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் யார்?

அ) ரவிச்சந்திரன் அஷ்வின்

ஆ) ஜஸ்பிரித் பும்ரா

இ) உமேஷ் யாதவ்

ஈ) குல்தீப் யாதவ்

10.இரண்டு மணி நேரத்தில் டுவிட்டரில் 123 பதிவுகள் போட்டு கவனத்தை ஈர்த்த உலகத் தலைவர் யார்?

அ) நரேந்திர மோடி

ஆ) டொனால்ட் டிரம்ப்

இ) ஜஸ்டின் ட்ரூடோ

ஈ) ஷி ஜின் பிங்

விடைகள்: 1.ஆ 2.ஈ 3.ஆ 4.இ 5.அ 6.அ 7.இ 8.அ 9.ஈ 10.ஆ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us