sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கடந்த வாரம் நான்கில் ஒன்று சொல்!

/

கடந்த வாரம் நான்கில் ஒன்று சொல்!

கடந்த வாரம் நான்கில் ஒன்று சொல்!

கடந்த வாரம் நான்கில் ஒன்று சொல்!


PUBLISHED ON : மார் 02, 2020

Google News

PUBLISHED ON : மார் 02, 2020


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி, சரியான விடையை முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.

1. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து பல்லாயிரம் கி.மீ. தூரம் பறந்து தனுஷ்கோடிக்கு தற்போது வலசை வந்துள்ள __________________ பறவைகளை, மாணவர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்?

அ) மணிப்புறா (Spotted dove)

ஆ) கரண்டிவாயன் (Eurasian Spoonbill)

இ) பெரிய காட்டு ஆந்தை (Forest Eagle Owl )

ஈ) பூநாரை (Flamingo)

2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் __________மொழிப் பாடத்தை கட்டாயமாக்க அம்மாநில அரசு கடந்த சில தினங்களுக்கு முன் மசோதா நிறைவேற்றியுள்ளது?

அ) மராத்தி, மகாராஷ்டிரம்

ஆ) தெலுங்கு, தெலங்கானா

இ) மலையாளம், கேரளம்

ஈ) குஜராத்தி, குஜராத்

3. நாய் மற்றும் பூனை இறைச்சி உண்பதற்கு எந்த நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது?

அ) தென்கொரியா

ஆ) இந்தியா

இ) சீனா

ஈ) ஜப்பான்

4. வயல்வெளியில் வெட்டுக்கிளி தாக்குதலைச் சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவும் வகையில், 1,00,000 எண்ணிக்கை கொண்ட எந்தப் படையை சீனா அனுப்புகிறது?

அ) குரங்குப்படை

ஆ) சேவல்படை

இ) வாத்துப்படை

ஈ) பாம்புப்படை

5 . இதுவரை பயன்படுத்தாமல், முதன்முறையாக கடந்த வாரம் முதல் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கியுள்ள உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான இவர் யார்?

அ) அசீம் பிரேம்ஜி

ஆ) பில்கேட்ஸ்

இ) ஜெப்பெசோஸ்

ஈ) வாரன் பஃபெட்

6. உலகிலேயே மிக வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த சிடேட்சு வடானபி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவருடைய வயது என்ன?

அ) 113

ஆ) 112

இ) 111

ஈ) 110

7. கடந்த 14 ஆண்டுகளில், போதிய உடலுழைப்பின்மை உள்ளிட்ட காரணங்களால், கிராமப்புறங்களில் _____________ நோய் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது?

அ) புற்றுநோய்

ஆ) நீரிழிவு

இ) காசநோய்

ஈ) இரத்த அழுத்தம்

8. உலகில் முதல் முறையாக வாடகைத் தாய் மூலம் _______________ குட்டி பிறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது?

அ) நாய்குட்டி

ஆ) பூனைக்குட்டி

இ) யானைக்குட்டி

ஈ) சிறுத்தைக்குட்டி

9. அமெரிக்காவைச் சேர்ந்த இவர், நடமாடும் கணினி என்று அழைக்கப்பட்டவர். முதல் மனிதனை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 திட்டத்தில் இவரது பங்கு அளப்பரியது. 101வது வயதில் மரணமடைந்த இவரது பெயர் என்ன?

அ) கேத்தரின் ஜான்சன்

ஆ) இவான்கா ஏஞ்சலோ

இ) ஜானியோ பிரின்சஸ்

ஈ) லில்லிகா சுமல்லியோ

10. ஹாலிவுட் திரைப்படங்களில் வில்லன்கள் எந்த பிராண்ட் போனை உபயோகிக்கக் கூடாது என்ற இரகசிய விதிமுறை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன?

அ) சாம்சங்

ஆ) ஹுவாய்

இ) ஆப்பிள்

ஈ) நோக்கியா

விடைகள்!



1) ஈ 2) அ 3) இ 4) இ 5) ஈ 6) ஆ 7) ஆ 8) ஈ 9) அ 10) இ






      Dinamalar
      Follow us