தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/கடந்த வாரம் நான்கில் ஒன்று சொல்!

கடந்த வாரம் நான்கில் ஒன்று சொல்!

கடந்த வாரம் நான்கில் ஒன்று சொல்!


PUBLISHED ON : மார் 09, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 09, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒவ்வொரு வாரமும் ஏராளமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றையெல்லாம் பார்த்து வருவீர்கள். இதற்கெல்லாம் சரியான விடை சொல்லுங்கள் பார்க்கலாம். தெரியாதவர்கள், உடனே கீழே திருப்பிப் பார்க்க வேண்டாம். கொஞ்சம் யோசித்து, நாளிதழ்களைப் புரட்டி, சரியான விடையை முயற்சி செய்து கண்டுபிடியுங்கள்.

1. தாஜ்மஹாலுக்குள் பார்வையாளர்கள் அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்யும்படி அதிகாரிகள் உத்தரப் பிரதேச அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கான காரணம் என்ன?

அ) கோபுரத்தை சுத்தம்செய்ய

ஆ) புதையல் தேட

இ) கொரோனா பயம்

ஈ) அப்படி எதுவுமில்லை

2. வரும் நிதியாண்டில், எதன் காரணமாக வாகன விற்பனை என்பது மோட்டார் வாகனத்துறைக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என ஹோண்டா மோட்டர்ஸ் இந்தியா நிறுவனத் துணைத் தலைவர் யாவீந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்?

அ) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

ஆ) சைக்கிளின் பெருக்கம்

இ) பிஎஸ்-6 தர வாகனங்களின் அறிமுகம்

ஈ) பெட்ரோல் விலையுயர்வு

3. பணியிடை நீக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் ஊழல் விசாரணைக்கு ஆளாகி இருக்கும் அரசு ஊழியர்களுக்கு எது வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.?

அ) ரேஷன் கார்டு

ஆ) ஆதார் அட்டை

இ) வாக்களிக்கும் உரிமை

ஈ) பாஸ்போர்ட்

4. _______________தனியார் வங்கி திவால் நிலைக்கு வந்ததையடுத்து, அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது?

அ) யெஸ் வங்கி (YES BANK)

ஆ) ஆர்.பி.எல். வங்கி (RBL BANK)

இ) எஸ்.பி.ஐ. வங்கி (SBI BANK)

ஈ) கோட்டக் மகிந்திரா வங்கி (KOTAK MAHINDRA BANK)

5. இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

அ) ரத்தன் சோரி சிங்

ஆ) பீமல் ஜுல்கா

இ) வித்தேஷ் ஷர்மா

ஈ) பாபு பட்டேல்

6. கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, வெளிமாநிலத்தவர் நுழைவதற்கான அனுமதியை எந்த மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது?

அ) உத்தரப் பிரதேசம்

ஆ) மணிப்பூர்

இ) சிக்கிம்

ஈ) கோவா

7. பாகிஸ்தானில் என்ன காரணத்தினால், தேசிய அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது?

அ) வெங்காய விலையுயர்வு

ஆ) பயிர்கள் மீதான வெட்டுக்கிளி தாக்குதல்

இ) கொரோனா பரவல்

ஈ) பறவைக் காய்ச்சல்

8. எகிப்தில், 4,600 ஆண்டுகளுக்கு முந்தைய எந்த மன்னரின் பிரமிடு, 14 ஆண்டுக்கால மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு திறந்து வைக்கப்பட்டது?

அ) மன்னர் ஜோசர்

ஆ) டுட்டான்கமுன்

இ) அங்க் அமான்

ஈ) ரமேசஸ்

9. கொரோனா வைரஸ் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் எவ்வளவு இழப்பு ஏற்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது?

அ) ரூ. 5 லட்சம் கோடி

ஆ) ரூ.10 லட்சம் கோடி

இ) ரூ.20 லட்சம் கோடி

ஈ) ரூ.25 லட்சம் கோடி

10. செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள, 'நாசா' அனுப்பவிருக்கும் ரோவருக்கு, 13 வயதுச் சிறுவன் பரிந்துரைத்த, எந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது?

அ) விடாமுயற்சி (Perseverance)

ஆ) வலிமை (Fortitude)

இ) உறுதிப்பாடு (Tenacity)

ஈ) புத்தி கூர்மை (Ingenuity)

விடைகள்

1)இ 2)இ 3)ஈ 4)அ 5)ஆ 6)இ 7)ஆ 8)அ 9)ஈ 10)அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us