sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்!

/

நான்கில் ஒன்று சொல்!

நான்கில் ஒன்று சொல்!

நான்கில் ஒன்று சொல்!


PUBLISHED ON : பிப் 27, 2023

Google News

PUBLISHED ON : பிப் 27, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. தமிழகத்தின் எந்த இரு மாவட்டங்களில், புதிய நகர்ப்புற வளர்ச்சிக் குழுமங்கள் அமைக்கும் பணிகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை தொடங்கியுள்ளது?

அ. ஈரோடு, திருச்சி

ஆ. திருச்சி, சேலம்

இ. மதுரை, இராமநாதபுரம்

ஈ. சேலம், ஈரோடு

2. இந்திய மாநிலமான ஜார்க்கண்டின், புதிய கவர்னராக சமீபத்தில் பதவி ஏற்றுள்ளவர்?

அ. சி.பி. இராதாகிருஷ்ணன்

ஆ. தமிழிசை சொந்தர்ராஜன்

இ. வானதி சீனிவாசன்

ஈ. இல.கணேசன்

3. இந்தியாவில், குறிப்பிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள எத்தனை இடங்களை, பொதுமக்கள் வசிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்ட பகுதிகளாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது?

அ. 18

ஆ. 15

இ. 10

ஈ. 20

4. தமிழக நகர்ப்புறப் பகுதிகளில், எத்தனை சதுர அடி வரையிலான குடியிருப்புக் கட்டடங்களுக்கு, பணிநிறைவுச் சான்று இன்றி, மின் இணைப்பு வழங்கலாம் என்று, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது?

அ. 5,060

ஆ. 10,050

இ. 7,070

ஈ. 8,070

5. ஐக்கிய நாடுகள் சபையான 'யுனெஸ்கோ'வின், 2023ஆம் ஆண்டிற்கான சர்வதேச தாய்மொழி விருதுக்கு, மொழியியலாளரும், நாட்டுப்புறக் கலைஞருமான மகேந்திரகுமார் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

அ. ஹரியாணா

ஆ. அசாம்

இ. ஒடிஷா

ஈ. தெலங்கானா

6. கேரள மாநிலம், தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், எத்தனை வகையான பறவை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்?

அ. 231

ஆ. 250

இ. 151

ஈ. 242

7. வேதாந்தா - பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து, மின்னணு சாதனங்கள் தயாரிப்பிற்கு அடிப்படை மின் கடத்திப் பொருளான, இந்தியாவின் முதல் செமி கண்டக்டர் ஆலையை, ரூ.1.54 லட்சம் கோடி முதலீட்டில் எங்கு அமைக்க உள்ளன?

அ. கர்நாடகம்

ஆ. குஜராத்

இ. சத்தீஸ்கர்

ஈ. இராஜஸ்தான்

8. மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த, 43வது தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அணி?

அ. ஆந்திரம்

ஆ. மேற்கு வங்கம்

இ. தமிழகம்

ஈ. மஹாராஷ்டிரம்

நான்கில் ஒன்று சொல் விடை

1. ஆ

2. அ

3. இ

4. ஈ

5. இ

6. அ

7. ஆ

8. இ






      Dinamalar
      Follow us