sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : மார் 27, 2023

Google News

PUBLISHED ON : மார் 27, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1 பெண்களின் விகிதம், இந்தியா சுதந்திரம் பெற்றபோது (9%) இருந்ததைவிட, எத்தனை சதவீதம் தற்போது உயர்ந்துள்ளதாக, தேசிய அளவிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது?

அ. 50

ஆ. 65

இ.68

ஈ. 70

2 முதன்முதலாக, 'பி.எம்.மித்ரா' எனும், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா, எந்தப் பகுதியில் அமைய உள்ளது?

அ. மும்பை

ஆ.விருதுநகர்

இ. சென்னை

ஈ.பெங்களூரு

3. இந்தியாவிலேயே முதன்முறையாக எந்த மாநிலத்தில், மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், 'டிஜிட்டல்' முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும், 'இன்ஸ்டென்ட் மனி பேமென்ட் சிஸ்டம்' (ஐ.எம்.பி.எஸ்.) எனும் வசதி தொடங்கப்பட்டுள்ளது?

அ. தமிழ்நாடு

ஆ. குஜராத்

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. ஹரியாணா

4. இந்தியாவின் எந்த மாநிலத்தில் சமீபத்தில், முதன்முறையாக மின்சார இரயில்களை இயக்கி, இந்திய இரயில்வே சாதனை படைத்துள்ளது?

அ. மிசோரம்

ஆ. பீஹார்

இ. மேகாலயா

ஈ. ஜார்க்கண்ட்

5. இந்தியாவில் உள்ள, சால்ட் லேக் என்ற பகுதியில், ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக, உலக வர்த்தக மையம் அமைய உள்ளது. இது எந்த மாநிலத்தில் உள்ளது?

அ. தெலங்கானா

ஆ. மஹாராஷ்டிரம்

இ.பஞ்சாப்

ஈ மேற்குவங்கம்

6 கிழக்கு ஆப்பிரிக்க நாடான இங்கு, கடும் வறட்சி காரணமாக கடந்தாண்டு மட்டும், 43,000 பேர் பலியாகி உள்ளது, உலக சுகாதார மையம் கூட்டாக அந்த நாடு எது ? நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது?

அ. சோமாலியா

ஆ. எத்யோபியா

இ. கென்யா

ஈ. உகாண்டா

7. ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டுள்ள, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தரவரிசைப் பட்டியலில், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ள ஐரோப்பிய நாடு?

அ. போலந்து

ஆ. ரோமானியா

இ. பின்லாந்து

ஈ. பெல்ஜியம்

விடை: 1.இ,2.ஆ,3.அ, 4. இ, 5. ஈ, 6. அ, 7.இ






      Dinamalar
      Follow us