sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : மே 01, 2023

Google News

PUBLISHED ON : மே 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. ஆசிய நாடான எந்த நாட்டின் இரண்டு செயற்கைக்கோள்களை, 'பி.எஸ்.எல்.வி. சி - 55' ராக்கெட் வாயிலாக, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், சமீபத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது?

அ. சிங்கப்பூர்

ஆ. மலேசியா

இ. சீனா

ஈ. தாய்லாந்து

2. வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தாயகத்திற்குப் பணம் அனுப்புவதில், 2022ஆம் ஆண்டு, எந்த நாடு முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாக, உலக வங்கி அறிக்கைத் தரவுகள் தெரிவிக்கின்றன?

அ. பாகிஸ்தான்

ஆ. இந்தியா

இ. அமெரிக்கா

ஈ. ரஷ்யா

3. இரண்டாம் உலகப் போரின்போது, 1,060 பேருடன் கடலில் மூழ்கிய, 'எஸ்.எஸ்.மோன்டோவீடியோ மாரு' என்ற பயணிகள் கப்பலின் சிதைவுகள், பிலிப்பைன்ஸ் கடற்பரப்பில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. எந்த நாட்டின் கப்பல் அது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. பிரேசில்

இ. கனடா

ஈ. ஜப்பான்

4. எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, புதுடில்லியில், எத்தனை ஆண்டுகளாகத் தான் வசித்த அரசு பங்களாவில் இருந்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் சமீபத்தில் வெளியேறினார்?

அ. 10

ஆ. 12

இ. 19

ஈ. 15

5. இந்தியா - சீனா எல்லையில் அமைந்துள்ள எந்த மாநிலத்தில், மனா என்ற கிராமத்தின் நுழைவு வாயிலில், முதல் இந்திய கிராமம் என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது?

அ. ஜம்மு - காஷ்மீர்

ஆ. சிக்கிம்

இ. அருணாச்சலப் பிரதேசம்

ஈ. உத்தரகண்ட்

6. வட ஆப்பிரிக்க நாடான சூடானில், இராணுவம், துணை இராணுவப் படையினர் இடையே, சமீபத்தில் போர் மூண்டது. இந்நிலையில், அங்கே சிக்கிய இந்தியர்களை மீட்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு வைத்த பெயர்?

அ. ஆப்பரேஷன் கங்கா

ஆ. ஆப்பரேஷன் காவிரி

இ. ஆப்பரேஷன் யமுனா

ஈ. ஆப்பரேஷன் கோதாவரி

7. இந்தியாவில் புதிதாக, 157 நர்சிங் கல்லூரிகளைத் திறக்க, மத்திய அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில், சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், எத்தனை கல்லூரிகள் தமிழகத்தில் அமைய உள்ளன?

அ. 11

ஆ. 12

இ. 13

ஈ. 14

விடைகள்: 1. அ, 2. ஆ, 3. ஈ, 4. இ, 5. ஈ, 6. ஆ, 7. அ.






      Dinamalar
      Follow us