PUBLISHED ON : ஜூலை 10, 2023

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. கடந்த ஆண்டுக்கான மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டு செயல்பாட்டில், இந்திய அளவில் தமிழகம், எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது?
அ. ஒன்று
ஆ. இரண்டு
இ. மூன்று
ஈ. நான்கு
2. தென்கொரியாவில் நடந்த ஆசிய கபடி தொடரில், நடப்பு சாம்பியனான எந்த அணி, மீண்டும் பட்டத்தைக் கைப்பற்றியது?
அ. இந்தோனேசியா
ஆ. இலங்கை
இ. தென்கொரியா
ஈ. இந்தியா
3. விளைச்சல் குறைவு காரணமாக, எந்த உணவுப் பொருளின் விலை அதிகரித்ததால், அதை ரேஷன் கடைகளில், கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது?
அ. வெங்காயம்
ஆ. இட்லி அரிசி
இ. பாசுமதி அரிசி
ஈ. தக்காளி
4. 'கருணாநிதி நூற்றாண்டு விழா' நூலகத்தை, வரும் 15ஆம் தேதி திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நூலகம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
அ. சென்னை
ஆ. கோவை
இ. மதுரை
ஈ. திருச்சி
5. 'காகிதமில்லா சட்டசபை' எனப்படும், தேசிய 'இ-விதான்' திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, மத்திய அரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ள மாநிலம் எது?
அ. தமிழகம்
ஆ. ஒடிசா
இ. கேரளம்
ஈ. குஜராத்
6. இந்தியாவில் உள்ள எத்தனை மாநிலங்களுக்கு, இந்த ஆண்டு முடிவுக்குள், சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது?
அ. நான்கு
ஆ. ஐந்து
இ. மூன்று
ஈ. இரண்டு
7. தமிழகத்தில், நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், 1 முதல்- 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, எந்தத் திட்டத்தை விரிவுபடுத்த, தமிழக அரசு அனுமதி அளித்து, ரூ.404.11 கோடி ஒதுக்கி உள்ளது?
அ. அனைவருக்கும் கல்வி
ஆ. வீடுதோறும் கல்வி
இ. முதல்வரின் காலை உணவு
ஈ. காலை வேளை உணவு
8. மஹாராஷ்டிர சட்டசபைக்கு, 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப்பின், எத்தனை ஆண்டுகளில் நான்காவது முறையாக, முதல்வர் பதவியேற்பு விழாக்கள் நடந்துள்ளன?
அ. நான்கு
ஆ. மூன்று
இ. இரண்டு
ஈ. ஐந்து
விடைகள்: 1. இ, 2. ஈ. 3. ஈ, 4. இ, 5. அ, 6. ஆ, 7. இ, 8. அ
