PUBLISHED ON : ஜூலை 24, 2023
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. அனைத்து மாநில ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கிக்கொள்ள வசதியாக கொண்டு வரப்பட்ட, 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம், எந்த மாநிலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது?அ. ஆந்திரம்
ஆ. தமிழகம்
இ. கேரளம்
ஈ. தெலங்கானா
2. அமெரிக்க டாலரைப் போல், எந்த நாட்டின் ரூபாயும் பொது கரன்சியாக இருப்பதை வரவேற்பதாக, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்?
அ. சீனா
ஆ. ரஷ்யா
இ. இந்தியா
ஈ. மலேசியா
3. இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில், எவ்வளவு மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதாக, மத்திய அரசின், 'நிதி ஆயோக்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
அ. 10.25 கோடி
ஆ. 15.03 கோடி
இ. 13 கோடி
ஈ. 13.5 கோடி
4. இந்தியா - மியான்மர் - தாய்லாந்து இடையே, எத்தகைய வழித்தடம் அமைப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத் தப்படுகிறது?
அ. கப்பல்
ஆ. விமானம்
இ. நெடுஞ்சாலை
ஈ. ரயில்
5. தமிழகத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்களுக்கான தேசிய தர உறுதிச் சான்றிதழ் பெறுவதில், எந்த மாவட்டம் முதலிடத்தில் உள்ளது?
அ. சென்னை
ஆ. திருப்பத்தூர்
இ. காஞ்சிபுரம்
ஈ. திருவள்ளூர்
6. வங்கியின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, உலக அளவில் எந்த வங்கி, ஏழாவது பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது?
அ. ஐ.சி.ஐ.சி.ஐ.
ஆ. சிட்டி யூனியன்
இ. எச்.எஸ்.பி.சி.
ஈ. எச்.டி.எப்.சி.
7. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து 2023 - 24 சீசனுக்கான சென்னை அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்?
அ. ஓவன் கோய்ல்
ஆ. ஸ்டீபன் கான்ஸ்டான்டின்
இ. கிபு விகுனா
ஈ. நவ்ஷத் மூஷா
8. தென்கொரியாவில் நடந்த உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சுபம் பிஸ்லா, சைன்யம் ஆகியோர், தலா என்ன பதக்கங்களைக் கைப்பற்றினர்?
அ. வெள்ளி
ஆ. வெண்கலம்
இ. தங்கம்
ஈ. தங்கம், வெள்ளி
விடை: 1. ஆ, 2. இ, 3. ஈ, 4. இ, 5. ஆ, 6. ஈ, 7. அ, 8. இ.
