தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : ஆக 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்கு மின்சாரம் வினியோகிக்க, திருநெல்வேலி மாவட்டத்தின் எந்தப் பகுதியில், துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது?

அ. களக்காடு

ஆ. நாங்குநேரி

இ. அம்பாசமுத்திரம்

ஈ. ராதாபுரம்

2. 'நாகரிகம் மற்றும் கலாசாரத்தின் பிறப்பிடமாகத் தமிழகம் திகழ்கிறது' என்று சமீபத்தில் பேசியவர்?

அ. ஆர்.என். ரவி

ஆ. மு.க. ஸ்டாலின்

இ. திரெளபதி முர்மு

ஈ. நரேந்திர மோடி

3. சென்னையில் பல ஆண்டுகளுக்குப் பின், 'டபுள் டெக்கர்' பேருந்து மீண்டும் சோதனை முயற்சியாக, எந்த வழித்தடத்தில் சமீபத்தில் இயக்கப்பட்டது?

அ. திருவான்மியூர் - பிராட்வே

ஆ. தாம்பரம் - பிராட்வே

இ. தி.நகர் - திருவேற்காடு

ஈ. கோயம்பேடு - தாம்பரம்

4. தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில், எத்தனை சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களிடம், எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது?

அ. 8

ஆ. 5

இ. 7.5

ஈ. 8.5

5. மத்திய அரசின், 'அமிர்த பாரத் ரயில்வே ஸ்டேஷன்கள்' என்ற திட்டத்தின் கீழ், எத்தனை ரயில் நிலையங்களை மேம்படுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது?

அ. 1500

ஆ. 1309

இ. 1225

ஈ. 1000

6. சென்னையில் உள்ள தமிழக கவர்னர் மாளிகையின் தர்பார் ஹால், என்னவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

அ. பாரதியார் மண்டபம்

ஆ. திருவள்ளுவர் மண்டபம்

இ. பாரதிதாசன் மண்டபம்

ஈ. கண்ணதாசன் மண்டபம்

7. தமிழகத்தில், சாலை விதிமுறைகளை மீறிய எத்தனை ஆயிரம் ஓட்டுனர் உரிமங்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளதாக, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்?

அ. 25,636

ஆ. 45,005

இ. 15,735

ஈ. 30,383

8. செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலில் ஒன்பதாம் இடம் பிடித்து, இந்தியாவின் 'நம்பர் 1' வீரர் இடத்தைப் பிடித்துள்ள, தமிழக கிராண்ட் மாஸ்டர் யார்?

அ. விதித் சந்தோஷ்

ஆ. குகேஷ்

இ. ஹரிகிருஷ்ணா

ஈ. பிரக்ஞானந்தா

விடை: 1. ஆ, 2. இ, 3. ஆ, 4. இ, 5. ஆ, 6. அ, 7. ஈ, 8. ஆ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us