PUBLISHED ON : ஆக 14, 2023

பைட்டோஹார்மோன்கள் (Phytohormones) என்பவை தாவர ஹார்மோன்கள்.
உண்மை. தாவரங்களின் வளர்ச்சிக்குச் சூரிய ஒளி, நீர், ஆக்சிஜன், தாதுக்கள் உள்ளிட்டவை தேவை. இவை வெளிப்புறக் காரணிகள். இவை தவிர, தாவரங்களின், வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்
சில உள்ளார்ந்த காரணிகள் உள்ளன. இவை, தாவர ஹார்மோன்கள் அல்லது, 'பைட்டோஹார்மோன்கள்' என்று அழைக்கப்படுகின்றன. செல் பிரிவு, விரிவாக்கம், பூக்கள், விதை உருவாக்கம் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துகின்றன. ஆக்சின், ஜிப்பரெலின், சைட்டோகைனின், எத்திலீன், அப்சிசிக் அமிலம் உள்ளிட்டவை தாவர ஹார்மோன்கள்.
ஆந்த்ராக்ஸ் (Anthrax) காற்றின் மூலம் பரவும் நோய்.
தவறு. ஆந்த்ராக்ஸ், விலங்குகள் மூலம் பரவும் ஒரு நோய். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், தாவரங்கள், விலங்குகளுக்கும் ஏற்படுகிறது. பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் (Bacillus anthracis) என்ற பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. மனிதர்களில் இந்நோய், தோல், நுரையீரல் பாதிப்பு, குடல் பாதிப்பு என, மூன்று விதங்களில் தோன்றும். தோலில் உண்டாகும் தொற்றே அதிகம். உடலில் காயங்கள், வெடிப்புகளில் கிருமிகள் பட்டு தொற்று பரவுகிறது. பாதிக்கப்பட்ட விலங்குகளின் தோல், ரோமங்கள், மாமிசத்தைக் கையாள்பவர்களுக்கும் இந்நோய் பரவும்.
