தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : அக் 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு, வினாடிக்கு எவ்வளவு கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடக மாநில அரசுக்கு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டது?

அ. 5,000

ஆ. 3,000

இ. 2,500

ஈ. 4,000

2. தமிழகத்தில், பொறியியல் படிப்பில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும், எந்தப் படிப்பைக் கட்டாயமாக்க, அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது?

அ. இசை

ஆ. நடனம்

இ. கணினி

ஈ. கணிதம்

3. இந்தியாவின் எந்த மாநிலத்தில், 'ட்ரோன்' விமானங்கள் மூலம், காய்கறிகள், மருந்துகள் ஆகியவற்றை மக்களுக்கு வினியோகிக்கும் திட்டத்தை, அரசின் உதவியுடன், தனியார் நிறுவனம் செயல்படுத்த உள்ளது?

அ. மேற்கு வங்கம்

ஆ. தமிழ்நாடு

இ. ஆந்திரம்

ஈ. குஜராத்

4. தமிழக மின் விசை நிதி நிறுவனம் முதன் முறையாக, கடந்த ஆண்டில் எவ்வளவு கோடி ரூபாய்க்கு மேல் நிகரலாபம் ஈட்டியுள்ளது?

அ. ரூ. 500 கோடி

ஆ. ரூ.1,200 கோடி

இ. ரூ. 1,500 கோடி

ஈ. ரூ. 1,000 கோடி

5. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், 2022ஆம் ஆண்டு, எவ்வளவு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளதாக, சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவை தெரிவித்துள்ளன?

அ. 10 லட்சம்

ஆ. 5 லட்சம்

இ. 8 லட்சம்

ஈ. 6 லட்சம்

6. இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதில் தாங்கள் உறுதியாக உள்ளதாக, எந்த நாட்டின் பிரதமர் சமீபத்தில் தெரிவித்தார்?

அ. லீ சயன் லூங் (சிங்கப்பூர்)

ஆ. ஜஸ்டின் ட்ரூடோ (கனடா)

இ. ஷேக் ஹசினா (வங்க தேசம்)

ஈ. மார்க் ரூட் (நெதர்லாந்து)

7. இந்திய தெற்கு ரயில்வேயில், எத்தனை விரைவு ரயில்களுக்கான வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது?

அ. 30

ஆ. 26

இ. 34

ஈ. 35

8. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத் தகுதிச்சுற்றில், இலக்கை 55.42 வினாடிகளில் கடந்து, பி.டி.உஷாவின் தேசிய சாதனையைச் சமன் செய்துள்ள தமிழக வீராங்கனை யார்?

அ. திவ்யா

ஆ. சந்தியா

இ. காவ்யா

ஈ. வித்யா

விடைகள்: 1.ஆ, 2.இ, 3.அ, 4.ஈ, 5.அ, 6.ஆ, 7.இ, 8.ஈ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us