sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : ஜூலை 08, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 08, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள் தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

01. தமிழகத்தில் எத்தனை நகராட்சிகளை, மாநகராட்சிகளாக உயர்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதா, சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது?

அ. நான்கு,

ஆ. மூன்று,

இ. இரண்டு,

ஈ. ஆறு

02. இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலராகச் சமீபத்தில் நியமிக்கப்பட்டு உள்ளவர்?

அ. விக்ரம் மிஸ்ரி,

ஆ. வினய் மோகன்

இ. அக்ஷய் தவேரி,

ஈ. சுனில் சிங்

03. அமெரிக்காவின் டயாபடிக் அசோசியேஷன் வழங்கிய, 'கெல்லி வெஸ்ட் நினைவு விருது,' அமோரி பல்கலைக்கழகம் வழங்கிய, 'சிறப்புச் சொற்பொழிவு விருது' என, மருத்துவ ஆராய்ச்சிக்காக இரண்டு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள ஒரே இந்திய மருத்துவர்?

அ. பிரதாப் ரெட்டி,

ஆ. வி.மோகன்

இ. அனிதா பரத்வாஜ்,

ஈ. தேவி ஷெட்டி

04. சர்வதேச யோகா தினத்தையொட்டி (ஜூன் 21), மத்தியக் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எந்த நிறுவனம், பல்வேறு அரசுத் துறைகளுக்கு, ரூ.8.68 கோடி மதிப்பிலான யோகா துணிகள், தரை விரிப்புகளை விற்று சாதனை புரிந்துள்ளது?

அ. காதி,

ஆ. கோ - ஆப்டெக்ஸ்

இ. குமரகோம்,

ஈ. யந்த்ரா

05. இந்தியாவில், ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறையில் பரவலான மாற்றத்தைக்கொண்டு வரும், எத்தனைப் புதிய குற்றவியல் சட்டங்கள், சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளன?

அ. ஒன்று,

ஆ. இரண்டு,

இ. மூன்று

ஈ. நான்கு

06. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட எந்த வரி விதிப்பு முறை, சமீபத்தில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்தது?

அ. ஜி.எஸ்.டி.,

ஆ. வருமானம்,

இ. சொத்து,

ஈ. சேவை

07. திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட எந்த ரூபாய் நோட்டுகளில், 97.87 சதவீதம் வங்கிக்குத் திரும்பியுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது?

அ. ரூ.1,000,

ஆ. ரூ.3000,

இ. ரூ.500

ஈ. ரூ.2,000

08. இந்தியா - தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் மூலம், பெண்கள் டெஸ்ட் வரலாற்றிலேயே இந்திய அணி, அதிகபட்சமாக எவ்வளவு ரன்கள் குவித்து, உலக சாதனை படைத்துள்ளது?

அ. 550,

ஆ. 603,

இ. 630,

ஈ. 583

விடைகள்: 1. ஈ, 2. அ, 3. ஆ, 4. அ, 5. இ, 6. அ, 7. ஈ, 8. ஆ.






      Dinamalar
      Follow us