sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : அக் 07, 2024

Google News

PUBLISHED ON : அக் 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்கும் பெற்றோருக்கு, மகப்பேறு விடுப்பு வழங்குதல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, எந்த மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது?



அ. தமிழகம்

ஆ. ஒடிசா

இ. குஜராத்

ஈ. தெலங்கானா

2. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் புதிதாகப் பதவியேற்று உள்ளவர்?

அ. எச்.பரத்வாஜ்

ஆ. எம்.கேசவன்

இ. கே.ஆர்.ஸ்ரீராம்

ஈ. வி.என்.பார்த்தசாரதி

3. லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது, நீண்ட காலமாகத் தாக்குதல் நடத்தி வந்த பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவரான யாரை, இஸ்ரேல் விமானப்படை ஏவுகணையால் தாக்கிக் கொன்றது?

அ. ஹசன் நஸ்ரல்லா

ஆ. முகம்மது யூசுப்

இ. சல்மான் மாலிக்

ஈ. ைஹதர் அலி

4. உலகில் உள்ள எந்த நாட்டில், எரியூட்டப்படும் உடல்களில் இருந்து கிடைக்கும் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்கள் வாயிலாக, கடந்தாண்டில் மட்டும் ரூ.377 கோடி வருவாய் கிடைத்துள்ளது?



அ. சீனா

ஆ. தென் கொரியா

இ. ஜப்பான்

ஈ. ரஷ்யா

5. பாலிவுட் திரையுலகில், 1980களில் புகழ்பெற்று விளங்கிய எந்த நடிகருக்கு, திரைத்துறையின் உயரிய விருதான, 'தாதா சாேஹப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது?



அ. நஸ்ருதீன் ஷா

ஆ. ஓம் பூரி

இ. ராஜ்கபூர்

ஈ. மிதுன் சக்கரவர்த்தி

6. அதிக அளவிலான தொழிற்சாலைகள், அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது ஆகியவற்றில், இந்திய அளவில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?



அ. அசாம்

ஆ. மஹாராஷ்டிரம்

இ. தமிழகம்

ஈ. ஆந்திரம்

7. ஆசிய நாடான ஜப்பானின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?

அ. ஷிகேரு இஷிபா

ஆ. ஃபியூமியோ கிஷிடா

இ. ஷின்சோ அபே

ஈ. யோஷிஹிடே சுகா

8. பீஹாரில் நடந்த இந்தியன் ஓபன் தடகளம் போட்டியில், பெண்களுக்கான உயரம் தாண்டுதலில், அதிகபட்சம் 1.76 மீ. உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை?



அ. கனிகா

ஆ. கோபிகா

இ. அனாமிகா

ஈ. தாருனிகா

விடைகள்: 1. ஆ, 2. இ, 3. அ, 4. இ, 5. ஈ, 6. இ, 7. அ, 8. ஆ.






      Dinamalar
      Follow us