
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. நமது நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, இதுவரை இல்லாத உச்சமாக, எவ்வளவு கோடி ரூபாய் அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது?
அ. ரூ.85.35 லட்சம் கோடி
ஆ. ரூ.59.22 லட்சம் கோடி
இ. ரூ.35.45 லட்சம் கோடி
ஈ. ரூ.55.25 லட்சம் கோடி
2. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு, மத்திய அரசின் பங்களிப்பு எத்தனை சதவீதம் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது?
அ. 75 சதவீதம்
ஆ. 55 சதவீதம்
இ. 50 சதவீதம்
ஈ. 65 சதவீதம்
3. நாட்டிலேயே இரண்டாவதாகவும், தமிழகத்தில் முதன்முறையாகவும், எந்தப் பகுதியில், இரவுநேர பூங்கா அமைய உள்ளது?
அ. கொல்லிமலை
ஆ. மாஞ்சோலை
இ. முண்டந்துறை
ஈ. வேடந்தாங்கல்
4. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பில், அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருவ்குன் ஆகியோர், எந்தத் துறைக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்?
அ. இயற்பியல்
ஆ. மருத்துவம்
இ. வேதியியல்
ஈ. பொருளாதாரம்
5. பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள்வதற்கு, எந்த நாட்டுக்கு உதவும் வகையில், பல உதவிகளைப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்துள்ளார்?
அ. அல்ஜீரியா
ஆ. உகாண்டா
இ. மாலத்தீவு
ஈ. கென்யா
6. பிரதமரின் தொழில் பயிற்சித் திட்டத்தில், ஐ.டி.சி., ரிலையன்ஸ் ரீடெய்ல், டி.சி.எஸ். உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இணைந்துள்ளதாக, மத்திய அரசின் எந்தத் துறை தெரிவித்துள்ளது?
அ. நிதி அமைச்சகம்
ஆ. தகவல்தொடர்பு
இ. உள்துறை
ஈ. கம்பெனிகள் விவகாரம்
7. இந்தியாவில், எவ்வளவு ரூபாய் முதலீட்டில், உணவு பதப்படுத்துதல் பூங்காவை அமைப்பதற்கு, ஐக்கிய அரபு அமீரகம் முன்வந்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்?
அ. ரூ.27,276 கோடிஆ. ரூ.16,500 கோடி
இ. ரூ.10,575 கோடி
ஈ. ரூ.23,200 கோடி
8. இலங்கை கிரிக்கெட் அணியின் முழுநேர தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள, அந்த அணியின் முன்னாள் கேப்டன் யார்?
அ. சனத் ஜெயசூர்யா
ஆ. அர்ஜுனா ரணதுங்கா
இ. குமார் சங்ககரா
ஈ. அட்டப்பட்டு
விடைகள்: 1. ஆ, 2. ஈ, 3. அ, 4. ஆ, 5. இ, 6. ஈ, 7. ஆ, 8. அ.