
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. இலங்கையில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் எந்த உணவுப் பொருளால், உள்நாட்டுக் கொள்முதல் விலை வீழ்ச்சி கண்டுள்ளதாக, விவசாயிகள், வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்?
அ. கோதுமை
ஆ. தனியா
இ. மிளகு
ஈ. மிளகாய்
2. உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள சஞ்சீவ் கன்னா, நாட்டின் எத்தனையாவது தலைமை நீதிபதி ஆவார்?
அ. 50
ஆ. 51
இ. 25
ஈ. 71
3. இந்தியப் பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும், 'செபி' அமைப்பின் தலைவர் யார்?
அ. ரோஷினி
ஆ. செளந்தர்யா
இ. சாந்தினி ஜீவன்
ஈ. மாதவி புஜ்
4. இந்தியாவில் உள்ள எந்தத் தேசிய கட்சி, 10 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக உருவெடுத்துள்ளது?
அ. காங்கிரஸ்
ஆ. பகுஜன் சமாஜ்
இ. பாரதிய ஜனதா
ஈ. அ.தி.மு.க.
5. 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை ஊக்குவிக்க, எவ்வளவு கோடி ரூபாய் துணிகர மூலதன நிதியத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
அ. ரூ.1,000
ஆ. ரூ.500
இ. ரூ.850
ஈ. ரூ.600
6. வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட எத்தனை வழித்தடங்களில், மலையேற்றத்துக்குச் செல்வோர் பதிவு செய்வதற்காக, www.trektamilnadu.com என்ற 'ஆன்லைன்' வசதியை, தமிழக அரசு தொடங்கியுள்ளது?
அ. 35
ஆ. 25
இ. 40
ஈ. 15
7. தமிழக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில், தீபாவளியை ஒட்டி எத்தனை வகையான பட்டு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன?
அ. 500
ஆ. 700
இ. 1000
ஈ. 550
8. மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி வென்ற பதக்கம்?
அ. வெள்ளி
ஆ. வெண்கலம்
இ. தங்கம்
ஈ. பிளாட்டினம்
விடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஈ, 4. இ, 5. அ, 6. இ, 7. ஆ, 8. அ.