sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நான்கில் ஒன்று சொல்

/

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : நவ 25, 2024

Google News

PUBLISHED ON : நவ 25, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. இலங்கை பார்லிமென்ட் தேர்தலில், மொத்தமுள்ள 225 இடங்களில், எத்தனை இடங்களைக் கைப்பற்றி, அதிபர் அனுரா குமார திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது?

அ. 200

ஆ. 159

இ. 100

ஈ. 135

2. வெளிநாட்டுச் சொத்துகள், வருவாய் குறித்த தகவல்களை, வருமான வரி கணக்குத் தாக்கலில் தெரிவிக்காவிட்டால், எவ்வளவு ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது?

அ. ரூ.5 லட்சம்

ஆ. ரூ.6 லட்சம்

இ. ரூ.2 லட்சம்

ஈ. ரூ.10 லட்சம்

3. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சமீபத்தில் எத்தனை தமிழ் அறிஞர்களின் நூல்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன?

அ. பத்து

ஆ. ஒன்பது

இ. எட்டு

ஈ. ஏழு

4. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோள், 'பால்கன் 9' என்ற ராக்கெட் உதவியுடன், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன ஏவுதளத்தில் இருந்து, வெற்றிகரமாக ஏவப்பட்டது. செயற்கைக்கோளின் பெயர் என்ன?

அ. ஜிசாட் 30

ஆ. ஜிசாட் 7ஏ

இ. ஐஆர்எஸ் 1ஏ

ஈ. ஜிசாட் என்2

5. சூரியசக்தி மின்சாரத்தைச் சேமித்து பயன்படுத்தும், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பை ஏற்படுத்த, சமீபத்தில் எந்த மாநிலத்திற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது?

அ. தமிழகம்

ஆ. புதுச்சேரி

இ. கேரளம்

ஈ. ஆந்திரம்

6. ரேஷன் எனப்படும், பொது வினியோக முறையில், 'டிஜிட்டல்' மயமாக்கும் நடவடிக்கைகளால், எத்தனை போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது?

அ. 8.60 கோடி

ஆ. 2.50 கோடி

இ. 50 லட்சம்

ஈ. 5.80 கோடி

7. கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகள் செய்ததற்காக, எந்த இரு கரீபிய நாடுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தங்கள் நாட்டின் உயரிய விருதுகளைஅளித்துக் கெளரவித்து உள்ளன?

அ. அருபா, பஹாமாஸ்

ஆ. கயானா, டொமினிகா

இ. பர்படாஸ், பெலிஸ்

ஈ. ஜமைக்கா, செயின்ட் லூசியா

8. டேவிஸ் கோப்பை போட்டியுடன், டென்னிஸ் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள பிரபல ஸ்பெயின் வீரர்?

அ. நோவக் ஜோகோவிச்

ஆ. ஜானிக் சின்னர்

இ. ரஃபெல் நடால்

ஈ. கார்லஸ் அல்காரஸ்

விடைகள்: 1. ஆ, 2. ஈ, 3. ஆ, 4. ஈ, 5. அ, 6. ஈ, 7. இ, 8. ஆ.






      Dinamalar
      Follow us