PUBLISHED ON : நவ 25, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு ஓர் எண் வரிசையில் நான்கு விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மூன்று ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. ஒன்று மட்டும் தொடர்பில்லாதது. அதைக் கண்டறிந்து நீக்குங்கள், காரணம் விடையில் கொடுக்கப்பட்டுள்ளது.
1) இமயமலை, ஆரவல்லி, விந்திய மலை, ஆல்ப்ஸ்
2) புழல் ஏரி, மோனோலேக், சாக்கடல் (டெட் சீ), சிலிகா
3) சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, மெசிகோ
4) தார், சகாரா, அரபு பாலைவனம், கோபி
5) ரஷ்யா, கியூபா, ஜப்பான், இலங்கை
விடைகள்:
1) ஆல்ப்ஸ் ஐரோப்பாவில் உள்ளது. மற்றவை இந்தியாவில் உள்ளவை.
2) புழல் நன்னீர் ஏரி. மற்றவை உப்பு ஏரிகள்.
3) தென் ஆப்பிரிக்கா பூமத்திய ரேகைக்குத் தெற்கே உள்ளது. மற்றவை வடக்கே உள்ளன.
4) கோபி குளிர் பாலைவனம். மற்றவை வெப்பப் பாலைவனங்கள்
5) ரஷ்யா. மற்றவை தீவு நாடுகள்.