
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. இந்தியாவில், குறைந்த ஊதியம் பெறும் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில், எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளதாக, சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது?
அ. 5.20
ஆ. 6.30
இ. 8.60
ஈ. 2.30
2. வேகமாக அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில், எந்த உயிரினம் வேட்டையாடப்படுவதைத் தடுத்து, அதைப் பாதுகாப்பதற்கான சிறப்பு மையம், சேலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது?
அ. வங்கு நரி
ஆ. வங்கப் புலி
இ. ஆசிய சிங்கம்
ஈ. பனிச்சிறுத்தை
3. 'ஊபர் இந்தியா' நிறுவனத்தின் முதல் நீர்ப் போக்குவரத்துச் சேவை, ஜம்மு - காஷ்மீரில் உள்ள எந்த ஏரியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது?
அ. லோக்தக்
ஆ. ஹுசைன் சாகர்
இ. தால்
ஈ. புலிகாட்
4. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, கல்லூரி மாணவர்களுக்காக, எதற்கான இரண்டு வாரக் கால இலவச பயிற்சி வகுப்பை, டிசம்பர் 9 - 20ஆம் தேதிகளில் நடத்த உள்ளது?
அ. ஸ்டார்ட் பயிற்சி
ஆ. இளம் விஞ்ஞானி
இ. ஆராய்ச்சி அறிவு
ஈ. சைபர் செக்யூரிட்டி
5. இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் மதிப்பு, 2023ஆம் ஆண்டில், 2.60 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, எவ்வளவு லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக, உலக வங்கி வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது?
அ. ரூ.80 லட்சம் கோடி
ஆ. ரூ. 55 லட்சம் கோடி
இ. ரூ. 25 லட்சம் கோடி
ஈ. ரூ. 50 லட்சம் கோடி
6. மஹாராஷ்டிராவின் முதல்வராகச் சமீபத்தில் பதவியேற்று உள்ள தேவேந்திர பட்னவிஸ், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்?
அ. சிவசேனா
ஆ. பாரதிய ஜனதா
இ. காங்கிரஸ்
ஈ. கம்யூனிஸ்ட்
7. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் 11வது சீசனில், இந்தியா - ஜப்பான் அணிகளுக்கான லீக் போட்டியில், இந்திய அணி எவ்வளவு ரன் வித்தியாசத்தில், இமாலய வெற்றியைப் பதிவு செய்தது?
அ. 211
ஆ. 250
இ. 155
ஈ. 200
8. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் எத்தகைய செயற்கைக்கோள்களை, 'பி.எஸ்.எல்.வி. -- சி59 ராக்கெட்' வாயிலாக, 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது?
அ. இன்சாட் - 1ஏ
ஆ. கல்பனா - 1
இ. பாஸ்கரா - 2
ஈ. புரோபா - 3
விடைகள்: 1. ஆ, 2. அ, 3. இ, 4. ஈ, 5. ஆ, 6. ஆ, 7. அ, 8. ஈ,