தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கடல் மல்லை

கடல் மல்லை

கடல் மல்லை


PUBLISHED ON : ஆக 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாறைகளில் திரும்பிய பக்கமெல்லாம் சிற்பங்களாக இருப்பது ஊருக்கு அழகுதானே! அப்படி மலை முழுக்க சிற்பங்களால் சிறப்புப் பெறும் ஊர் மாமல்லபுரம். பல்லவர் காலத்தின் மிகப்பெரிய கலைச்சின்னம் அடங்கிய ஊர். கற்களை அடுக்கிக் கட்டாமல் பாறைகளைக் குடைந்து செதுக்கப்பட்டிருப்பது இங்குள்ள கோயில், சிற்பங்களின் சிறப்பு. மாமல்லபுரம் பல்லவ அரசர்களின் துறைமுகப் பட்டினம். மகேந்திரவர்மனின் புதல்வன் நரசிம்மன் என்கிற மாமல்லன் இந்த நகரத்தில் வளர்ந்தார் (கி.பி.630 - 668). அவருக்கு முன் இந்த நகரத்திற்கு நீர்ப்பெயற்று, நீர்ப்பாயல், ஜலசயனம், கடல் மல்லை என பல பெயர். மாமல்லன் வாழ்ந்த நகரம் என்பதால் மாமல்லபுரம் என்றானது.

மானவர்மன் என்ற இலங்கை அரசர் தன் நாட்டை இழந்து மாமல்லன் உதவியை நாடி வந்தார். அவருக்கு தன்னுடைய கடற்படையைக் கொடுத்து உதவியிருக்கிறார். அந்தக் கடற்படை மாமல்லபுரத்தில் இருந்து சென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாமல்லபுர சிற்பங்கள், கோயில்கள் அனைத்தும் பல்வேறு காலங்களில் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டவை. முதலாம் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், ராஜசிம்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். உலகப்புகழ்ப்பெற்ற கடற்கரைக்கோயில் , ஐந்து ரதங்கள், குன்றில் குடையப்பட்ட கோயில்கள், புலிக்குகை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

கடற்கரையில் இன்னும் பல கோயில்கள் இருந்திருக்க வேண்டும். அது கடல் நீர் உட்புகுந்ததால் கடலுக்கு அடியில் அழிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. கடல் ஆய்வின் போது சிற்பத் துகள்களை நீருக்கு அடியில் இருந்து கண்டெடுத்து இருக்கிறார்கள் கடல் தொல்லியல் துறையினர்.

சென்னையில் இருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ள மாமல்லபுரம் தற்போது தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us