தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ரயிலில் உணவு விற்பனை சுயஉதவி குழுக்களுக்கு அனுமதி!

ரயிலில் உணவு விற்பனை சுயஉதவி குழுக்களுக்கு அனுமதி!

ரயிலில் உணவு விற்பனை சுயஉதவி குழுக்களுக்கு அனுமதி!


PUBLISHED ON : ஏப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயிலில் பயணிகளுக்கு உணவு தயாரித்து விற்பனை செய்வதற்கு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், நாளொன்றுக்கு 11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விற்பனையாகின்றன. இந்நிலையில், உள்ளூர் மக்களின் தொழில்வாய்ப்பை மேம்படுத்தவும், பயணிகளுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், ரயில்வே துறை இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, செகந்தராபாத், விஜயவாடா, எர்ணாகுளம் உள்ளிட்ட முக்கிய 10 ரயில் நிலையங்களில், சுயஉதவிக் குழுக்களின் உள்ளூர் வகை உணவு தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும். இதன்மூலம், ரயில்வே துறையில் நிலவும் உணவுத்தர குறைபாடு தொடர்பான புகார்கள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உணவு வகைகளை, ஆன்லைன் மூலமும் ஆர்டர் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us