பூமியிலிருந்து நிலவுக்கு லிஃப்ட் சென்னை மாணவரின் ஐடியா!
பூமியிலிருந்து நிலவுக்கு லிஃப்ட் சென்னை மாணவரின் ஐடியா!
PUBLISHED ON : ஏப் 10, 2017

பூமி மற்றும் நிலவுக்கு இடையே லிஃப்ட் அமைத்து, மனிதர்களை குடியேற்றலாம் என்று யோசனை அளித்த சென்னை மாணவரை, நாசா பரிசளித்துப் பாராட்டியுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த சாய் கிரண் (18 வயது), தற்போது சென்னையில் படித்து வருகிறார். மனிதர்களை விண்வெளியில் குடியேற்றுவதற்குத் தேவையான யோசனைகளை வரவேற்று, அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா, போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில் கலந்துகொண்ட கிரண், இரண்டாம் பரிசை வென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, 'ராக்கெட் மூலம் மனிதர்களை அனுப்புவது மிகவும் செலவுபிடிக்கக்கூடிய காரியம். அதற்கு பதில், நிலவுக்கும் பூமிக்கும் லிஃப்ட் அமைத்து, மனிதர்களை அனுப்பினால், பொருளாதாரத்தை மிச்சம் செய்யலாம். விண்வெளி நிர்வாகம், பொழுதுபோக்கு, விவசாயம் உள்ளிட்ட விஷயங்களையும் என்னுடைய ஆய்வுக்கட்டுரையில் விவாதித்துள்ளேன்' இவ்வாறு கிரண் தெரிவித்துள்ளார்.
