தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'பிரின்ஸ்' புலி மறைவு சுற்றுலா பயணிகள் சோகம்

'பிரின்ஸ்' புலி மறைவு சுற்றுலா பயணிகள் சோகம்

'பிரின்ஸ்' புலி மறைவு சுற்றுலா பயணிகள் சோகம்


PUBLISHED ON : ஏப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திபூர் புலிகள் சரணாலயத்தில், பிரபலமானது 'பிரின்ஸ்' புலி, (12 வயது). கடந்த 2013ம் ஆண்டு, பிரின்ஸ் ஒரு காட்டெருமையை வீழ்த்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் பிரின்ஸ் பிரபலமானது. பந்திபூர் வனப்பகுதியில் அதிக முறை (27 தடவை) புகைப்படம் எடுக்கப்பட்ட புலி என்ற பெருமையை பெற்றிருந்த பிரின்ஸைக் காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் காணாமல் போன பிரின்ஸ் புலியை, வன அதிகாரிகள் சடலமாக மீட்டனர். வயது முதிர்வு காரணமாக, அப்புலி உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மிக விருப்பத்துக்குரிய பிரின்ஸ் புலியின் இறப்பு, சுற்றுலா பயணிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us