
ஜூன் 12, 2002 - உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள்
உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான குழந்தைகள் மிகவும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைத் தவிர்க்கும்பொருட்டு, உலகில் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஜூன் 13, 1944 - பான் கி மூன் பிறந்த நாள்
ஐக்கிய நாடுகள் சபையின் எட்டாவது பொதுச் செயலாளர். இரண்டு முறை பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். உலக அமைதி, வறுமை ஒழிப்பு, பருவநிலை மாறுபாட்டில் அக்கறை, பாலின பாகுபாடு களைதல், இளையோர் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். 2016 டிசம்பர் 31ல் பணி நிறைவு பெற்றார்.
ஜூன் 14, 1444 - நீலகண்ட சோமயாஜி பிறந்த நாள்
கேரளாவைச் சேர்ந்த வானியலாளர், கணிதவியலாளர். 'தந்திர சங்கிரகா' என்னும் நூலை எழுதியுள்ளார். இவருடைய வேறு சில குறிப்பிடத்தக்க படைப்புகளாக ஆர்யபாட்டிய பாசியம், கோலசாரா, சந்திரசயகணிதம் போன்றவை அறியப்படுகின்றன.
ஜூன் 14, 2004 - உலக இரத்தக் கொடையாளர்கள் நாள்
இரத்தத்தில் உள்ள வகைகளைக் கண்டுபிடித்தவர் கார்ல் லான்ட்ஸ்டைனர். இவர் பிறந்த நாளையும், இரத்த தானம் செய்வோரைச் சிறப்பிக்கும் விதமாகவும் உலக சுகாதார நிறுவனம் இந்த நாளைக் கொண்டாடுகிறது.
ஜூன் 15, 2007 - உலக காற்று நாள்
உயிரினங்கள் உயிர் வாழக் காற்று அவசியம். காற்றின் தேவையை அறிந்து கொள்ளவும், அதனை மாசு இல்லாமல் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 17, 1973 - லியாண்டர் பயஸ் பிறந்த நாள்
இந்திய டென்னிஸ் வீரர். இரட்டையர் பிரிவில் 18 கிராண்ட் ஸ்லாம், 1996 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் பெற்றார். ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, பத்ம பூஷன் விருதுகள் பெற்றுள்ளார்.