
ஒரு நூல் எப்படி இருக்க வேண்டும் என்பதை நன்னூல் குறிப்பிடுகிறது. நூல் அமைய, பத்து அழகான விஷயங்களை அது குறிப்பிடுகிறது. அந்த பத்து விஷயங்களை உள்ளடக்கி எழுதப்படும் நூல், அழகுடையவை என்றும் கூறுகிறது. அந்தப் பத்து அழகான விஷயங்கள்தான் என்னென்ன?
* சொல்வதைச் சுருங்கச் சொல்லுதல்.
* சுருங்கச் சொல்லிய போதிலும், கற்பவர்க்கு புரியுமாறு இருத்தல்.
* கற்பவர்க்கு இனிமை பயக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்.
* நல்ல சொற்களை அமைத்தல்.
* இனிய ஓசை உடையதாக இருத்தல்.
* பொருளாழம் இருக்குமாறு அமைத்தல்.
* பொருளை முறைப்பட வைத்தல்.
* உலகத்தோடு (உலகமரபோடு) மாறுபடாதிருத்தல்.
* உயர்ந்த பயன் தரும் சொற்களைப் பயன்படுத்துதல்.
* விளக்கத்திற்கு ஏற்ற உதாரணங்களை அமைத்தல்.
பத்தும் நூலிற்கு, அழகு சேர்ப்பவையாகும்.
நூற்பா,
'சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க்கு இனிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
முறையின் வைப்பே உலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்து
ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே'