
ஜூன் 19, 1945 - ஆங் சான் சூச்சி பிறந்த நாள்
மியான்மர் மக்களின் நலனுக்காக, அகிம்சை வழிப் போராட்டத்தைக் கையில் எடுத்து, 'ஜனநாயக லீக் கட்சி'யைத் தொடங்கினார். 20 ஆண்டுகள் ராணுவ அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். 2010ல் விடுதலை ஆனார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்.
ஜூன் 19, 1947 - சல்மான் ருஷ்டி பிறந்த நாள்
இந்தியாவில் பிறந்து, இங்கிலாந்தில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர். 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்கிற நாவலுக்காக, புக்கர் பரிசு பெற்றிருக்கிறார். இலக்கியச் சேவைகளுக்காக, 2007ல் இவருக்கு இங்கிலாந்து அரசு 'சர்' பட்டம் வழங்கி கௌரவித்தது.
ஜூன் 21, 1982 - உலக இசை நாள்
இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. வரும் தலைமுறையினருக்கு இசை ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களைப் பாராட்டும் விதத்திலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 21, 1987 - சர்வதேச யோகா நாள்
யோகா என்பது, இந்தியாவில் தோன்றிய ஒரு கலை. யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த, சமண மதங்களில் காணப்படுகின்றன. உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைக்க உதவுகிறது. ஐ.நா. பொதுச்சபையில் அனைத்து நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டது.
ஜூன் 23, 2003 - ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை நாள்
சேவை செய்யும் பண்பானது, நல்லொழுக்கத்தின் அடையாளமாக இருக்கிறது. பொதுச் சேவையை ஊக்குவிக்கவும். சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கவும் ஐ.நா. பொதுச்சபை இந்த நாளைக் கொண்டாடி வருகிறது.
ஜூன் 25, 1931 - வி.பி.சிங் பிறந்த நாள்
இந்தியக் குடியரசின் 10வது பிரதமர். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தவர்கள் யாராக இருந்தாலும், தயங்காமல் நடவடிக்கை எடுத்தார். அனைத்து சமுதாயத்தினருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில், இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை துணிச்சலாக அமல்படுத்தினார்.