sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : செப் 11, 2017

Google News

PUBLISHED ON : செப் 11, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 11, 1862: ஓ ஹென்றி பிறந்த நாள்

உலகப்புகழ் பெற்ற ஆங்கிலச் சிறுகதை எழுத்தாளர். இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர். இவரது கதைகள், எளிமையான தொடக்கம், இடையில் ஒரு சிக்கல், எதிர்பாராத முடிவு என்று தனித்துவமாக இருக்கும். கேலிச்சித்திரங்களும் வரைந்தார்.

செப்டம்பர் 15, 2007: அனைத்துலக மக்களாட்சி நாள்

ஜனநாயகத்தை ஊக்குவிக்கவும், மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றுக்கு கௌரவத்தைக் கொடுக்கவும் ஐ.நா. சபை இந்த நாளை அனுசரிக்கிறது.

செப்டம்பர் 15, 1909: சி.என். அண்ணாதுரை பிறந்த நாள்

அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்டார். செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். சிறந்த பேச்சாளராகவும், தமிழ், ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் புகழ் பெற்றார்.

செப்டம்பர் 16, 1987: உலக ஓசோன் பாதுகாப்பு நாள்

ஓசோன் படலத்துக்கு ஆபத்து விளைவிக்கும் குளோரோ புளோரோ கார்பன் வேதிப்பொருட்களுக்கு எதிரான ஐ.நா. - மான்ட்ரீல் உடன்படிக்கை கையெழுத்தானது. இதனை நினைவு கூரும் வகையில், இந்த நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 16, 1922: கி.ராஜநாராயணன் பிறந்த நாள்

தமிழ் எழுத்தாளர். 'கரிசல் இலக்கியத்தின் தந்தை'. கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை இவரது எழுத்துகள் விவரித்தன. கரிசல் வட்டார அகராதியை உருவாக்கினார். 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக, 1991ல் சாகித்ய அகாதமி விருது பெற்றார்.

செப்டம்பர் 17, 1879: ஈ.வெ.ரா. பிறந்த நாள்

ஈ.வெ. ராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும், மூடநம்பிக்கைகள், சாதி வேற்றுமைகளை அகற்றவும் போராடிய பகுத்தறிவாளர். 'தென்னிந்தியாவின் சாக்ரடிஸ்' என்று போற்றப்பட்டார்.






      Dinamalar
      Follow us