sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கபிலர் பாடிய பூக்கள் எவை?

/

கபிலர் பாடிய பூக்கள் எவை?

கபிலர் பாடிய பூக்கள் எவை?

கபிலர் பாடிய பூக்கள் எவை?


PUBLISHED ON : செப் 11, 2017

Google News

PUBLISHED ON : செப் 11, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்துப்பாட்டு எனும் சங்க நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலர் என்னும் புலவர் பாடியது. இந்தப் பாட்டில் 99 பூக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கபிலர். அவர் திட்டமிட்டு 99 பூக்களைப் பற்றி பாடவில்லை. ஆரிய அரசன் பிரகத்தன் என்பவரை கபிலர் (எங்கோ) சந்திக்கிறார். அந்த அரசனுக்கு தமிழின் பெருமை, தமிழர் காதலை உணர்த்தும் வகையில் இந்தப் பாடலைப் பாடுகிறார். 'அன்னாய் வாழி வேண்டன்ன' என தொடங்கும் அந்தப் பாடல், 261 அடிகளைக் கொண்டது.

பாடலின் இடையில்தான் 99 பூக்களின் பெயர்கள் வருகின்றன. இவை மட்டும் அல்ல, பிறவும் என்று அந்தப் பாடலில் குறிப்பிடுவதால், நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கள் குறிஞ்சி நிலத்தில் பூத்திருந்தன என்பதை நாம் அறியவேண்டும். நீர், நிலம், மலையடிவாரம், மரக்கிளை என்று எங்கும் காணும் பூக்களை தலைவி, தோழியருடன் சேர்ந்து சேகரிக்கிறாள். அங்கு தலைவன் வருகிறான். அப்போது யானை வருகிறது. தலைவி பயம் கொள்கிறாள், அவன் காப்பாற்றுகிறான் என்று பாடலின் கதை நீள்கிறது. கபிலர் குறிப்பிட்டுள்ள பூக்கள், பெரும்பாலும் நாம் அறிந்தவையே. ஆனால், வேறு பெயர்களில் அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் ஒரு சில பூக்களின் பெயர்கள் மட்டும் இங்கே!

மணிச்சிகை - குன்றிமணி

உந்தூழ் - பெரு மூங்கில்

கூவிளம் - வில்வ மரம்

சுள்ளி - முள் கனகாம்பரம்

கூவிரம் - வில்வ மரம்

வடவனம் - துளசி

எருவை - கோரைப் புல்

செருவிளை - வெள்ளைக்காக்கணாம் பூ

வானி - ஓமம்

வகுளம் - மகிழம் பூ

ஆவிரை - ஆவாரம் பூ

வேரல் - மலை மூங்கில்

கோங்கம் - நெல்லி மரம்

அதிரல் - காட்டு மல்லி

வள்ளி - பூசணி

கொகுடி - கொடி முல்லை

செம்மல் - முல்லை

கோடல் - வெண்காந்தள்

கைதை - தாழம்பூ

மரா அம் - கடம்ப மரம்

தணக்கம் - நுணா மரம்

ஆத்தி - திருவாத்தி மரம்

பகன்றை - கிலுகிலுப்பைச்செடி

பலாசம் - முருக்க மரம்,

பிண்டி - அசோக மரம்

பித்திகம் - சாதிமல்லி

சிந்துவாரம் - நொச்சி

துழாய் - கிருஷ்ணதுளசி

புன்னாகம் - புங்கை

பாரம் - பருத்தி

பீரம் - பீர்க்கம் பூ

ஆரம் - சந்தனம்

காழ்வை - அகில்

நரந்தம் - நாரத்தம்

நாகம் - நாவல்

குருந்(து)தம் - காட்டு எலுமிச்சை

புழகு - மலை எருக்கு






      Dinamalar
      Follow us