தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/தமிழ் எண்களைத் தெரியுமா

தமிழ் எண்களைத் தெரியுமா

தமிழ் எண்களைத் தெரியுமா


PUBLISHED ON : செப் 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2017


Follow on Google
அ நிறம் | அளவு

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்கிறார் திருவள்ளுவர். நமக்கு எழுத்துகள் தெரியும். அ, ஆ, இ, ஈ… என்று தமிழில் உள்ள இருநூற்று நாற்பத்து ஏழு எழுத்துகளையும் அறிவோம்.

தமிழ்மொழி எழுத்துகள் மட்டுமல்லாமல், பிற மொழி எழுத்துகளையும் அறிந்து வைத்திருக்கிறோம். இவ்வெழுத்துகளால் ஆன சொற்களை நாம் எழுதவும் பேசவும், பல்வேறு வகைகளில் பயன்படுத்தவும் அறிந்திருக்கிறோம்.

இவ்வெழுத்துகள் எல்லாம் திருவள்ளுவர் சொன்ன 'எண்ணும் எழுத்தும்' என்பதில் ஒரு பாதிதான். எழுத்துகள் என்பவை ஒரு கண் என்றால், இன்னொரு கண் எண்கள். 1, 2, 3...என்று எண்களையும் நாம் அறிந்திருக்கிறோம்.

எழுத்துகளையும் எண்களையும் அறிந்திருப்பதுதான் இரண்டு கண்களையும் பெற்றிருப்பதற்கு நேர். இங்கே எழுத்துகளை அறிவது என்பது, மொழியில் ஒன்றை எழுதவும் பேசவும் எல்லா வகைகளிலும் பயன்படுத்தவும் கற்றிருத்தல் ஆகும். எண்களை அறிவது என்பது எண்களைக்கொண்டு கணக்கிடத் தெரிந்திருத்தல் ஆகும்.

இங்கே நாம் ஒரு வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டும். நாம் கணக்கிடுவதற்கும் எழுதுவதற்கும் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் எண்கள், அரபு எண்களாகும். நம் முன்னோர்களும் எண்களால் ஆகிய கணக்கீட்டைச் செய்து பார்த்தவர்கள்தாம். நாமும் கணிதத்தில் முன்னோடிகள்தாம். அதனால், தமிழிலும் எண்கள் உள்ளன. அவற்றை நாம் பொது வழக்கில் பயன்படுத்தாமல் கைவிட்டுவிட்டோம்.

வட இந்தியப் பகுதிகளில், அரபி எண்களைப் பயன்படுத்தாமல் அவர்களுடைய தேவநாகரி எழுத்துகளையே பயன்படுத்துகிறார்கள். சாலைக் கற்களில்கூட தேவநாகரி எழுத்துகளில் எழுதி வைத்திருக்கிறார்கள். தற்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்களைப் புகுத்தியிருக்கிறார்கள்.

நிலைமை இவ்வாறிருக்க, நாம் தமிழ் எண்களை அறியாமல் இருக்கிறோம். தமிழார்வலர்கள் பலர் தம்முடைய வண்டிகளில் தமிழ் எண்களையே எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வண்டிகளில் தமிழ் எண்களில் எழுதலாம் என்று தமிழக அரசும் ஒரு வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது. தமிழ் எண்கள் என்ன என்று பார்க்கலாம்.

மேலே 0 முதல் ௯ வரையுள்ள தமிழ் எண்களைப் பார்த்தோம். சரி, தமிழ் எண்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது? அதற்கும் ஓர் எளிய வழி இருக்கிறது. ஒரு சொற்றொடரை ஞாபகம் வைத்துக் கொள்ளவும். அதை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். அதிலுள்ள முதலெழுத்துகளை ஒன்று இரண்டு மூன்று என்று வரிசைப்படுத்தி நினைவில் கொண்டு வரலாம். இதுதான் அந்தச் சொற்றொடர் : “கடுகு உளுந்து ஙனைச்சு சமைச்சு ருசிச்சு சாப்பிட்டேன்' என்று அவன் கூறினான்.” கடுகில் உள்ள க = 1. உளுந்துவில் உள்ள உ = 2 இப்படி எல்லா எண்களையும் நினைவில் கொள்வதுபோல் செய்யலாம்.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us