sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : செப் 25, 2017

Google News

PUBLISHED ON : செப் 25, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 26, 1932: மன்மோகன் சிங் பிறந்த நாள்

இந்தியாவின் 14வது பிரதமர். மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராகப் பணியாற்றினார். மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார்.

செப்டம்பர் 27, 1980: உலக சுற்றுலா நாள்

பொருளாதாரம், கலாசாரம், சமுதாய ஒற்றுமை உணர்வை மக்கள் மனத்தில் ஏற்படுத்த, உலக சுற்றுலா அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது, ஐ.நா.வின் கீழ் இயங்குகிறது. இந்த நாள் உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் கொண்டாடப்படுகிறது.

செப்டம்பர் 28, 1907: பகத் சிங் பிறந்த நாள்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், புரட்சியாளர். நாட்டிற்காகப் போராடி மடிந்ததால், 'மாவீரன் பகத் சிங்' என அழைக்கப்பட்டார். ஆங்கில ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கி விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனத்தில் விதைக்கக் காரணமாக இருந்தார்.

செப்டம்பர் 28, 1982: அபினவ் பிந்த்ரா பிறந்த நாள்

துப்பாக்கி சுடும் வீரர். 2002ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும், 2008 பீஜிங் ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் பெற்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டிகளில் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முதல் இந்தியர். ரியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்து சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

செப்டம்பர் 29, 2000: உலக இதய நாள்

புகையிலை, முறையற்ற உணவுகள், கொழுப்பு போன்றவை இதய நோயை ஏற்படுத்துகின்றன. உலக இதய அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, யுனெஸ்கோ போன்றவை இந்த நாளைக் கொண்டாடுகின்றன. இந்த நாளின் முக்கிய நோக்கம், மாரடைப்பை வரும் முன் காப்பதும், வந்தபின் குணமடையச் செய்வதும்தான்.

அக்டோபர் 1, 1847: அன்னி பெசன்ட் பிறந்த நாள்

இந்தியாவின் சமூகச் சீர்திருத்தம், விடுதலைக்காகப் போராடியவர். மகளிர் வாக்குரிமை, தொழிலாளர் மேம்பாட்டுக்காகப் பணியாற்றினார். அகில இந்திய காங்கிரஸின் முதல் பெண் தலைவராக இருந்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் இணைந்து 'இந்திய மாதர் சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார்.






      Dinamalar
      Follow us