sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

டென்னிஸ் உலகை ஆளப் பிறந்தவள்!

/

டென்னிஸ் உலகை ஆளப் பிறந்தவள்!

டென்னிஸ் உலகை ஆளப் பிறந்தவள்!

டென்னிஸ் உலகை ஆளப் பிறந்தவள்!


PUBLISHED ON : செப் 25, 2017

Google News

PUBLISHED ON : செப் 25, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செரினா வில்லியம்ஸ்: 26.9.1981

ஃப்ளோரிடா, அமெரிக்கா


2017 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் தன் அக்கா வீனஸ் வில்லியம்ஸ் உடன் செரினா விளையாட வேண்டும். ஏழு ஆண்டுகள் கழித்து, அக்காவும் தங்கையும் மோதுவதைப் பார்க்க டென்னிஸ் உலகம் முழுக்க கண் இமைக்காமல் காத்துக் கொண்டிருந்தது, அந்தப் போட்டியில் 64 - 64 என நேர் செட்களில் செரினா வென்று, 23வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் ஸ்டெஃபி கிராப் சாதனையை முறியடித்து சாதனை படைத்தார். தன்னுடைய சரித்திர வெற்றியை அக்காவுடன் பகிர்ந்துகொள்ள கட்டியணைத்த செரினா, 'என் அக்கா இல்லையெனில், 23 கிராண்ட் ஸ்லாம் இல்லை; நம்பர் 1 இல்லை; எல்லாவற்றுக்கும் காரணம் வீனஸ்தான்' என சொல்லச் சொல்ல வீனஸ் நெகிழ்ந்தார்.

1995ல் தொழில்முறை வீராங்கனையான பிறகு முன்னணி வீராங்கனைகளை வென்றார். உலக டென்னிஸ் தரவரிசையில் 304வது இடத்தில் இருந்து 99வது இடத்துக்கு முன்னேறி, மிக விரைவாக டாப் 10 பட்டியலிலும் இடம்பிடித்தார். ஒரே நேரத்தில் 4 முக்கிய டைட்டில்களை வென்றதால், இருமுறை 'தி செரினா ஸ்லாம்' பட்டம் பெற்றார். தொடர் தோல்விகளும், காயங்களும் குறுக்கிடும் போதெல்லாம், அவை அத்தனையையும் கடந்து, மீண்டும் விட்ட இடத்தைப் பிடிப்பது செரினா ஸ்டைல்.

செரினாவின் பலமே அதிரடியான 'சர்வீஸ்'தான். போட்டியின் தொடக்கத்தில் எந்த வேகம் காட்டுகிறாரோ கடைசி வரை அதே வேகத்துடன் விளையாடுவதில் கில்லாடி. இவரது சர்வீஸின் வேகம் மணிக்கு 206 கி.மீ.! 20 ஆண்டுகளில் 10 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் வென்ற ஒரே வீராங்கனை; அக்காவுடன் சேர்ந்து அதிக எண்ணிக்கையில் கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் டைட்டில்; உலகின் 'நம்பர் ஒன்' வீராங்கனையாக 309 வாரங்களுக்கு மேல்; என இவரது சாதனைப் பட்டியல் நீளமானது. டென்னிஸ் விளையாட்டில், தான் சம்பாதித்ததைக் கொண்டு அறக்கட்டளை தொடங்கி, கல்விக்கான உதவிகளையும், ஆப்பிரிக்காவில் பல பள்ளிகளையும் தொடங்கியிருக்கிறார் இந்த டென்னிஸ் ராணி!

கிராண்ட் ஸ்லாம் வெற்றிகள் 23

ஆஸ்திரேலியன் ஓபன் 7

பிரெஞ்சு ஓபன் 3

விம்பிள்டன் 7

யு.எஸ். ஓபன் 6






      Dinamalar
      Follow us