
அக்டோபர் 31, 1875 - வல்லபாய் படேல் பிறந்த நாள்
சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர். நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர். சுதந்திரமடைந்த காலகட்டத்தில், ஆங்காங்கு பிரிந்துகிடந்த மன்னராட்சி மற்றும் சுயாட்சிப் பிரதேசங்களை ஒன்றிணைத்தார். இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று போற்றப்படுகிறார்.
நவம்பர் 3, 1618 - ஔரங்கசீப் பிறந்த நாள்
முகலாயப் பேரரசர்களில் குறிப்பிடத்தக்கவர். ஔரங்கசீப். இவரது பெற்றோர் ஷாஜகான், மும்தாஜ். இந்தியாவை ஒருங்கிணைத்து திறம்பட ஆட்சி செய்த முதல் பேரரசர். இவரது ஆட்சிக்காலத்தில் முகலாயப் பேரரசு காபூலில் இருந்து தமிழகம் வரை பரந்து விரிந்திருந்தது.
நவம்பர் 3, 1933 - அமார்த்திய சென் பிறந்த நாள்
இந்தியப் பொருளாதார மேதை. 1998ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார். பொருளாதாரம் தவிர, மனித நேயம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய சேவைகளைப் பாராட்டி, பல நாடுகள் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன. 1999ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
நவம்பர் 4, 1897 - ஜானகி அம்மாள் பிறந்த நாள்
இந்தியத் தாவரவியல் நிபுணர். மரபினக் கலப்பு ஆய்வில் ஈடுபட்டார். புகழ்பெற்ற தாவரவியலாளர் சிரில் டார்லிங்டன் உடன் இணைந்து, 'தாவர குரோமோசோம் அட்லஸ்' என்ற வரைபடத் தொகுப்பை வெளியிட்டார். 1977ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
நவம்பர் 4, 1929 - சகுந்தலாதேவி பிறந்த நாள்
இந்தியக் கணிதமேதை. 'மனித கம்ப்யூட்டர்' என அழைக்கப்பட்டார். ஜோதிடத்துறையிலும் புகழ்பெற்றிருந்தார். மின்னல் வேகத்தில் கணிதக் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமை பெற்றிருந்தார். தனது கணித அறிவால் சர்வதேச அளவில் பிரபலமடைந்து கின்னஸில் இடம் பெற்றார்.
நவம்பர் 5, 1988 - விராட் கோலி பிறந்த நாள்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப் பட்டியலில் ஒருநாள் போட்டிகளில் 2வது இடத்திலும், டி20 போட்டிகளில் முதல் இடத்திலும் இருக்கிறார். சமீபத்தில் தனது 200வது ஒருதினப் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

