PUBLISHED ON : டிச 11, 2017

டிசம்பர் 11, 1969 - விஸ்வநாதன் ஆனந்த் பிறந்த நாள்
இந்தியாவின் 'கிராண்ட் மாஸ்டர்'. பதினாறு வயதில் சதுரங்கத்தில் அதிவேகமாகக் காய்களை நகர்த்தி 'மின்னல் சிறுவன்' என்று பெயர் பெற்ற தமிழர். 2003இல் உலக சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் எனப் பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார்.
டிசம்பர் 11, 2002 - சர்வதேச மலைகள் நாள்
மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அவர்களது கலாசார பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐ.நா. சபையால் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 12, 1981 - யுவராஜ் சிங் பிறந்த நாள்
இடது கையில் விளையாடக்கூடிய இந்திய கிரிக்கெட் வீரர்.
2007ஆம் ஆண்டு நடந்தடி--20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர் அடித்தார். அர்ஜுனா, பத்மஸ்ரீ விருதுகள் பெற்றிருக்கிறார். இவருடைய சுயசரிதை The Test of My Life : From Cricket to Cancer and Back.
டிசம்பர் 14, 2001 - தேசிய ஆற்றல் பாதுகாப்பு நாள்
மின்சாரத்தைச் சேமிப்பது; இயற்கை வளங்களைக் குறைவாகப் பயன்படுத்துவது; புதுப்பிக்கும் ஆற்றல் வளங்களைக் கண்டறிவது; ஆற்றலை வீணாக்காமல் இருப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய அரசால் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
டிசம்பர் 15, 1832 - கஸ்டவ் ஈஃபிள் பிறந்த நாள்
கட்டட நிபுணர். இரும்பைக் கொண்டு புதுவிதமான பாலங்களைக் கட்டிப் பிரபலமடைந்தார். பாரீஸில் இரும்புத் துண்டுகளை வைத்து பிரமாண்டமாகக் கட்டப்பட்ட ஈஃபிள் கோபுரத்தை வடிவமைத்தது இவர்தான்!
டிசம்பர் 16, 1770 - பீத்தோவன் பிறந்த நாள்
உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய இசை மேதை. பியானோ, வயலின் இசைக் கலைஞராகவும், இசை இயக்குநராகவும் திகழ்ந்தார். கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட பிறகும், மிகச் சிறந்த சிம்பொனி இசை வடிவங்களை உலகுக்கு வழங்கினார்.
