sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மே 10, 2026 ,சித்திரை 27, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

தேதி சொல்லும் சேதி

/

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : டிச 25, 2017

Google News

PUBLISHED ON : டிச 25, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிசம்பர் 25, 1924 - அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாள்

இந்தியாவின் 10வது பிரதமர். சொற்பொழிவாளர், இலக்கியவாதி, பத்திரிகையாளர் என பன்முகத் திறமை கொண்டவர். 1996இல் சில நாட்களும், 1998 -- 2004இல் பிரதமராகவும் பதவி வகித்தார். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் பட்டமும், பத்மபூஷண் விருதும் பெற்றிருக்கிறார்.

டிசம்பர் 26, 2004 - சுனாமி நாள்

இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது சுனாமி பேரலை. உலகின் மோசமான இயற்கைச் சீரழிவுகளில் 6வது இடம்பெற்ற இந்தப் பேரழிவின் சோகங்களை நினைவுகூர இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

டிசம்பர் 26, 1893 - மா சேதுங் பிறந்த நாள்

சீன வல்லரசின் சிற்பி. இவரது ஆட்சிக் காலத்தில் தொழில்மயமாக்கல், கல்வி வளர்ச்சி, விவசாயம், பொது சுகாதாரம் ஆகியவற்றில் சீனா முன்னேற்றம் கண்டது. அரசியல் பொருளாதாரப் புரட்சி மட்டுமன்றி சமூகப் புரட்சியையும் தூண்டக் காரணமாக இருந்த புரட்சிகரத் தலைவர்.

டிசம்பர் 27, 1571 - ஜோஹன்னஸ் கெப்ளர் பிறந்த நாள்

ஜெர்மனியைச் சேர்ந்த கணிதவியலாளர், வானியலாளர். கோள் இயக்கம் தொடர்பாகப் பல ஆராய்ச்சிகளையும், தொலைநோக்கி வேலை செய்யும் விதத்தையும் விளக்கினார். 'சாட்டிலைட்' என்ற வார்த்தையை உருவாக்கியதும் இவரே! 'எபிடோமி அஸ்ட்ரோநோமியா' என்ற புகழ்பெற்ற நூலை எழுதியிருக்கிறார்.

டிசம்பர் 27, 1822 - லூயி பாஸ்டர் பிறந்த நாள்

நுண்ணுயிரியலின் தந்தை. 'பாலை புளிக்கச் செய்வதும் ஒருவகை பாக்டீரியாதான்' என்று நிரூபித்தார். இவரது பெயரிலிருந்தே, உணவுப் பொருள் பதப்படுத்தும் முறைக்கு 'பாஸ்ச்சரைசேஷன்' என்று பெயர்வந்தது. வெறிநாய் கடியால் உண்டாகும் ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார்.

டிசம்பர் 28, 1932 - திருபாய் அம்பானி பிறந்த நாள்

இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி. ஒரு துணி வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கினார். 2000ஆம் ஆண்டில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட பட்டியலில் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us