தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : ஜன 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜனவரி 15, 1949 - இந்திய ராணுவ நாள்

பிரிட்டிஷ்காரர்களுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் முதல் ராணுவத் தளபதியாக ஜெனரல் கே.எம். கரியப்பா, இந்த நாளில் பதவி ஏற்றார். இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்றதை நினைவுகூர, இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனவரி 15, 1841 - ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள்

ஆங்கிலேயப் பொறியாளர். பல இன்னல்களுக்குப் பிறகு, தன் குடும்பச் சொத்துகளை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டினார். சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நினைவைப் போற்றும் வகையில், தேனி மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 17, 1706 - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பிறந்த நாள்

அறிவியல், அரசியல், இசை என பன்முகத் திறமை கொண்டவர். இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். இவரது மேற்பார்வையில் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் உருவானது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு, இவர் படத்துடன் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன.

ஜனவரி 19, 1736 - ஜேம்ஸ் வாட் பிறந்த நாள்

இயந்திரப் பொறியாளர். நீராவி இயந்திரத்தில் மாற்றங்கள் செய்து தொழிற்புரட்சிக்கு வித்திட்டார். குதிரைத் திறன் (HP) என்ற அளவு முறையைக் கொண்டு வந்தார். மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு 'வாட்' என இவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 20, 1937 - அமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. புதிய அதிபர் ஜனவரி 20இல் பதவியேற்பார். பதவியேற்கும் நாள் ஞாயிறாக இருந்தால், ஜனவரி 21 திங்கட்கிழமை அன்று பதவியேற்பார்கள்.

ஜனவரி 21, 1953 - பால் ஆலன் பிறந்த நாள்

பில்கேட்ஸுடன் இணைந்து 1975இல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைத் தொடங்கினார். MS-DOS போலவே Q-DOS என்ற மென்பொருளைக் கண்டறிந்தார். இந்த நிறுவனத்தின் 'ஐடியா மேன்', 'மேன் ஆஃப் ஆக் ஷன்' என்று அழைக்கப்படுகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us